வெளிநாட்டுக்கு சென்றுவருவதற்கு அனுமதியளிக்குமாறு, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உடுவே தம்மாலோக்க தேரர், சார்பில் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
பொல்ஹேன்கொட எலன்மெதிணியாராமவில், சட்டவிரோதமான முறையில் யானைக்குட்டியொன்றை வைத்திருந்தார் என்று குற்றஞ்சாட்டி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் அவர், சந்தேகநபராக குறிப்பிடப்பட்டுள்ளார்.
இந்நிலையிலேயே செப்டெம்பர் மாதம் 3ஆம் திகதி முதல் 7ஆம் திகதி வரையிலும், வெளிநாட்டுக்கு செல்வதற்கு அனுமதியளிக்குமாறு அவர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி கோரிநின்றார்.
இதுதொடர்பில், அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது.