Breaking
Sat. Nov 23rd, 2024

இலங்கையில் தங்கியிருக்கும் நோக்கத்தில் விமானம் மூலம் நாட்டுக்குள் பிரவேசிக்கும் வெளிநாட்டவர்கள் மற்றும் ஹோட்டல்,  சுற்றுலா சம்பந்தப்பட்ட தொழில்களுடன் தொடர்புடையவர்கள் இரத்த பரிசோதனை செய்து கொள்வது அவசியம் என சுகாதார அமைசர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

25 இலட்சம் ரூபாய் செலவில் களுத்துறை, கட்டுகஹேன பிரதேச வைத்தியசாலையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள ‘சுவதிவி’ மருத்துவ மையத்தை திறந்துவைத்து உரையாற்றும் போது இதனைக் கூறினார்.

நாட்டுக்குள் வரும் வெளிநாட்டவர்களுக்கு மலேரியா, எயிட்ஸ் போன்ற நோய்கள் இருக்கின்றதா என்று அறிந்துகொள்ளுவதற்காக இவ்வாறு இரத்தப் பரிசோதளை செய்யப்படுவதாக அமைச்சர் மேலும் கூறினார்.

By

Related Post