Breaking
Sun. Sep 22nd, 2024

ஊழியர் சேம­லாப நிதியம் மற்றும் ஊழியர் நம்­பிக்கை நிதி­யத்தின் பாது­காப்பு கேள்­விக்­கு­றி­யா­கி­யுள்­ள­தோடு வெளி­நாட்­ட­வர்­க­ளுக்கு தாரா­ள­ம­யமும் உள்­நாட்­ட­வர்­க­ளுக்கு நெருக்­க­டி­யையும் அரசின் வரவு செலவுத் திட்டம் தோற்­று­வித்­துள்­ள­தாக கொழும்பு மாவட்ட ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் பாரா­ளு­மன்ற உறு ப்­பினர் தினேஷ் குணவர்த்­தன தெரி­வித்­துள்ளார்.

அரசின் வரவு செல­வுத்­திட்டம் தொடர்­பாக தினேஷ் குண­வர்த்­தன எம்.பி. மேலும் தெரி­வித்­தி­ருப்­ப­தா­வது. 2016ஆம் ஆண்டு நாடு மிக மோச­மான விளை­வு­களை சந்­திக்கும் விதத்­தி­லான வரவு செலவுத் திட்­டத்­தினை அரசு முன்­வைத்­துள்­ளது.

இதன் மூலம் ஐ.தே.கட்­சியின் உண்­மை ­யான மக்கள் விரோத செயற்­பா­டுகள் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. வாழ்க்கைச் செலவு குறையும் என்ற மக்­களின் எதிர்­பார்ப்பு 2016ஆல் நிறை­வே­றாது மாறாக வாழ்க்கைச் செலவு அதி­க­ரிக்கும் ஆண்­டாக அது அமையும்.

தொழில் புரிவோர் மற்றும் தொழில் செய்­வ­தற்கு எதிர்­பார்த்­தி­ருப்போர் பாரிய நெருக்­க­டி­களைச் சந்­திக்க நேரிடும்.அரச வளங்கள் அனைத்தும் தனியார் மய­மாக்­கப்­படும். அது மட்­டு­மல்­லாது ஊழியர் சேம­லாப நிதி மற்றும் ஊழியர் நம்­பிக்கை நிதி­யத்தின் பாது­காப்­பிற்கு அச்­சு­றுத்தல் ஏற்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.

உழைக்கும் வர்க்­கத்­தி­ன­ரி­ட­மி­ருந்து இந்த உரி­மைகள் பறிக்­கப்­படும் ஆபத்து தலை­ தூக்­கி­யுள்­ளது. அர­சிற்கு உள்ள காணி மற்றும் பெருந்­தோட்­டத்­துறை உரி­மைகள் பறிக்­கப்­பட்டு அவை தனி­யா­ருக்கு வழங் கும் ஆபத்து தலை­தூக்­கி­யுள்­ளது.

இலங்­கையின் பொரு­ளா­தார நீரூற்று வெளி­நா­டு­க­ளுக்குத் தாரை வார்க்­கப்­படப் போகின்­றது. வெளி­நாட்­ட­வர்­க­ளுக்கு தாரா­ள­மயக் கொள்­கையும் உள் நாட்­ட­ வர்­க­ளுக்கு நெருக்­க­டி­களும் ஏற்­படும் நிலை உரு­வாக்­கப்­பட்­டுள்­ளது. நாட்டின் பொருளாதாரத்தை முழுமையாக வெளி நாட்டவர்களுக்கு வழங்கி விட்டு உள்நா ட்டவர்களை ஓரம் கட்டியுள்ள வரவு செல வுத் திட்டம் இதுவாகும் என்று தினேஷ் குணவர்த்தன எம்.பி. தெரிவித்துள்ளார்.

By

Related Post