Breaking
Mon. Dec 23rd, 2024
வெளிநாட்டு நிதியை இலங்கையின் வங்கிகளில் வைப்பிடும் போது, புதிய சட்டத்திட்டங்கள் அமுலாக்கப்படுவதாக கூறப்படும் செய்தி மறுக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் ரவி கருணாநாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.
புதிதாக இவ்வாறான சட்டங்கள் அமுலாக்கப்பட்டுள்ளதாக ஊடகங்களில் வெளியான செய்திகளில் உண்மையில்லை என்று அவர் கூறியுள்ளார்.
கொழும்பில் நேற்று (14) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து அவர் இதனைக் கூறி இருந்தார்.
இந்த ஊடக சந்திப்பில் கலந்து கொண்டிருந்த மத்திய வங்கியின் நிதி நுண்ணறிவு பிரிவின் பணிப்பாளர் எச். அமரதுங்க, வெளிநாட்டு நிதியை இலங்கையின் வங்கிகளில் வைப்பிடும் போது, வழமையாக கோரப்படுகின்ற தகவல்களுக்கு மேலதிகமாக எதுவும் கோரப்படாது என்று கூறியுள்ளார்.

By

Related Post