Breaking
Fri. Nov 15th, 2024

மனித உரிமை மீறல் குற்­றச்­சாட்­டுக்கள் தொடர்பில் நடத்­தப்­ப­ட­வுள்ள விசா­ரணை செயற்­பாட்டில் வெளி­நாட்டு நீதி­ப­தி­களை பங்­கெ­டுக்கச் செய்ய வேண்­டு­மென நான் எனது அறிக்­கையில் பரிந்­துரை செய்­ய­வில்லை.

மாறாக தேவை­யெனில் விசா­ரணை செயற்­பாட்டில் வெளி­நா­டு­களின் தொழில்­நுட்ப உத­வி­களை பெற்­றுக்­கொள்­ளலாம் என்ற பரிந்­து­ரை­யையே முன்­வைத்தேன் என்று காணாமல் போனோர் குறித்து விசா­ரணை செய்யும் ஆணைக்­கு­ழுவின் தலைவர் ஓய்வுபெற்ற நீதி­பதி மெக்ஸ்வல் பர­ண­கம தெரி­வித்தார்.

மனித உரிமை மீறல் மற்றும் போர்க்­குற்­றங்கள் குறித்த இறுதி அறிக்­கையை தயா­ரித்த போது எனக்கு எந்­த­வி­த­மான சவாலும் இருக்­க­வில்லை. உண்­மையைக் கூறு­வ­தற்கு யாருக்கும் பயப்­ப­ட­வேண்­டி­ய­தில்லை என்ற எண்­ணக்­க­ருவின் அடிப்­ப­டை­யி­லேயே அறிக்­கையை தயா­ரித்தேன் என்றும் அவர் குறிப்­பிட்டார்.

கிடைக்­கப்­பெற்ற தக­வல்கள் மற்றும் சாட்­சி­யங்­களின் அடிப்­ப­டை­யி­லேயே அறிக்கை தயா­ரிக்­கப்­பட்­ட­தா­கவும்,

தான் இந்த விட­யத்தில் சுயா­தீ­ன­மாக செயற்­பட்­ட­தா­கவும் அவர் குறிப்­பிட்டார். கடந்­த­வாரம் வெளி­யி­டப்­பட்ட அவ­ரது அறிக்கை தொடர்பில் கருத்து வெளி­யி­டு­கை­யி­லேயே மெக்ஸ்வல் பர­ண­கம மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

பர­ண­கம ஆணைக்­கு­ழுவின் அறிக்கை கடந்த வாரம் வெளி­யி­டப்­பட்ட நிலையில் அது உள்­நாட்­டிலும் வெளி­நாட்­டிலும் பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­தி­யி­ருந்­தது. குறிப்­பாக ஐக்­கிய நாடு­களின் மனித உரிமை அலு­வ­லகம் வெளி­யிட்ட அறிக்கை மற்றும் அமெ­ரிக்­கா­வினால் கொண்டு வரப்­பட்டு நிறை­வேற்­றப்­பட்ட பிரே­ரணை என்­ப­வற்றை விடவும் பார­தூ­ர­மா­ன­தாக பர­ண­கம அறிக்கை காணப்­ப­டு­வ­தாக கூறப்­பட்­டது.

இந்­நி­லையில் இந்த அறிக்கை தயா­ரிப்பு தொடர்பில் தற்­போது பிரான்­ஸுக்கு விஜயம் மேற்­கொண்­டுள்ள மெக்ஸ்வல் பர­ண­கம தொடர்ந்தும் கருத்து வெளி­யி­டு­கையில்:

எமது ஆணைக்­கு­ழு­விற்கு வழங்­கப்­பட்ட இரண்­டா­வது ஆணைக்கு அமை­யவே இந்த அறிக்­கையை முழு­மை­யாக தயா­ரித்து அர­சாங்­கத்­திடம் வழங்­கினோம். மனித உரிமை மீறல் மற்றும் போர்க்­குற்­றங்கள் குறித்த இறுதி அறிக்­கையை தயா­ரித்த போது எனக்கு எந்­த­வி­த­மான சவாலும் இருக்­க­வில்லை.

உண்­மையைக் கூறு­வ­தற்கு யாருக்கும் பயப்­ப­ட­வேண்­டி­ய­தில்லை என்ற எண்­ணக்­க­ருவின் அடிப்­ப­டை­யி­லேயே அறிக்­கையை தயா­ரித்தேன். குறிப்­பாக வெ ளிநாட்டு நீதி­ப­தி­களை கொண்டு விசா­ரணை நடத்த வேண்­டு­மென நான் பரிந்­துரை செய்­ய­வில்லை.

அதா­வது வெளி­நாட்டு நீதி­ப­தி­களை இலங்­கையின் விசா­ரணை செயற்­பாட்டில் உட்­ப­டுத்­த­வேண்டும் என்றோ அவர்­களை விசா­ரணை செயற்­பாட்டில் பங்­கெ­டுக்கச் செய்­ய­வேண்டும் என்றோ நாங்கள் அறிக்­கையில் பரிந்­துரை செய்­ய­வில்லை. மாறாக தேவை­யெனில் விசா­ரணை செயற்­பாட்டில் வெளி­நா­டு­களின் தொழில்­நுட்ப உத­வி­களை பெற்­றுக்­கொள்­ளலாம் என்ற பரிந்­து­ரையை முன்­வைத்தேன். குறிப்­பாக நாங்கள் எமது விசா­ரணை செயற்­பாட்டில் வெளி­நா­டு­களின் உத­வி­களை பெற்றோம். விசே­ட­மாக டெஸ்மன்ட் சில்­வாவின் ஆலோ­ச­னையை பெற்றோம். அது­போன்று அர­சாங்கம் தேவை­யெனின் சர்­வ­தேச தொழில்­நுட்ப உத­வி­களை பெற முடியும். அத­னையே நான் எனது அறிக்­கையில் முன்­வைத்­துள்ளேன்.

மேலும் எமது ஆணைக்குழுவுக்கு கிடைக்­கப்­பெற்ற தக­வல்கள் மற்றும் சாட்­சி­யங்­களின் அடிப்­ப­டை­யி­லேயே அறிக்கை தயாரிக்கப்பட்டது. இந்த விடயத்தில் சுயாதீனமாகவே நான் செயற்பட்டேன். எனக்கு ஒரு பொறுப்பு வழங்கும் போது அது சுயாதீனமாக செயற்படுவேன். அதன் அடிப்படையிலேயே இந்த அறிக்கையையும் தயாரித்து வழங்கினேன் என்றார்.

By

Related Post