Breaking
Fri. Nov 15th, 2024

வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிமித்தம் சென்றுள்ளவர்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகளுக்கு உதவுவதற்காக நடமாடும் சேவைகளை பிரிடோ நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது.

இந்த நடமாடும் சேவை நாளை காலை 9 மணிமுதல் டயகம நகர மண்டபத்தில் நடைபெறும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்று சென்ற பலர் விசேடமாக வீட்டுப்பணிப்பெண்களாக சென்றுள்ள பெண்களில் பலர் பல்வேறு விதமான பிரச்சினைகளை எதிர் நோக்குகின்றனர்.

இடைத்தரகர்களால் ஏமாற்றப்படுதல், மத்திய கிழக்கில் வேலை செய்யும் வீடுகளில் துன்புறுத்தப்படுதல், இதன் காரணமாக அங்கிருந்து தப்பி தூதரகத்தில் தஞ்சமடைதல், அல்லது தற்கொலை செய்துகொள்ளுதல் ஒப்பந்த காலம் முடிவடைந்த பின்னரும் திருப்பி அனுப்பாமல் தடுத்து வைக்கப்படுதல்.

நீண்ட காலம் குடும்பத்தோடு தொடர்புகள் இல்லாத நிலையில் இருத்தல், காணமால்போதல், சம்பளம் முறையாக கிடைக்காமை, போன்ற பல்வேறு பிரச்சினைகளால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறானவர்கள் தங்கள் பிரச்சினைகளுக்கு நிவாரணம் பெற வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியத்தில் முறைப்பாடு செய்தல் வேண்டும்.

எனினும் பலருக்கு இவ்வாறு முறைப்பாடு செய்யும் முறை தெரியாதிருத்தல், முறைப்பாடு செய்யும் போது சமர்ப்பிக்கப்பட வேண்டிய ஆவணங்கள் பற்றிய தெளிவு இல்லாமை என்பவற்றால் முறைப்பாடுகளை செய்ய முடியாத நிலையில் உள்ளனர்.

குறித்த, நடமாடும் சேவை மூலமாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணிகயத்தின் முறைப்பாட்டு பிரிவுக்கு சமர்ப்பித்து தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள பிரிடோ நிறுவனம் உதவிகளைச் செய்ய திட்டமிட்டுள்ளது.

மேற்கூறிய பிரச்சினைகள் உள்ளவர்கள் தங்களிடம் உள்ள ஆவணங்களுடன் இந்த நடமாடும் சேவையில் கலந்து கொண்டு பயன் பெறலாம். இதன்போது கொண்டு வர வேண்டிய ஆவணங்கள் தொடர்பான விபரங்களை 0772277441 – 071 4661486 என்ற இலக்கத்தோடு தொடர்பு கொண்டு அறிந்து கொள்ள முடியும் எனவும் குறித்த நிறுவனத்தார் தெரிவித்துள்ளனர்.

By

Related Post