Breaking
Thu. Dec 26th, 2024

வெளிநாட்டு வங்கிகளில் கணக்குகள் உள்ளதாக கூறி தன்னையும் தனது குடும்பத்தையும் அவமதிப்பதற்கு முயற்சியொன்றியை குறிப்பிட்ட சிலர் மேற்கொண்டு வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசியல் முக்கியஸ்தர் ஒருவரின் மகனால் டுபாயில் வங்கி கண்க்கில் வைப்பு செய்யப்பட்ட 650 அமெரிக்க டொலர் கணக்கினை தடை செய்வதற்கு அந்நாட்டு நீதிமன்றம் செயற்படுகின்றது.

இலங்கை அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட கோரிக்கைக்கமையவே டுபாய் நீதிமன்றம் இந் நடவடிக்கையை மேற்கொள்கின்றதாக ஊடகங்களில் செய்தி வெளியாகின.

இதற்கிடையில் வெளிநாட்டு வங்கிகளில் கணக்குகள் உள்ளதாக கூறி தன்னையும் தனது குடும்பத்தையும் அவமதிப்பதற்கு முயற்சியொன்றியை குறிப்பிட்ட சிலர் மேற்கொண்டு வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

பீ.பீ.சி சர்வதேச செய்தி சேவைக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

தனக்கும் தனது சகோதரர்களுக்கு எவ்வித வெளிநாட்டு வங்கி கணக்குகளும் இல்லை என அவர் கூறியுள்ளார்.

உலங்கு வானூர்திகள், லம்போர்கினி வாகனங்கள் மற்றும் விலையுயர்ந்த குதிரைகள் தங்களிடம் உள்ளதாக கடந்த காலங்களில் பல்வேறு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

எனினும் குறித்த பிரச்சாரங்கள் அனைத்து போலியானதென தற்போது உறுதியாகியுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

By

Related Post