அமைச்சர் தலதா அத்துகோரள இந்த விசேட குழுவை நியமித்துள்ளார். இக்குழுவில் 6 சட்டத்தரணிகளும் கணக்காளர் ஒருவரும், கணனி தொழில்நுட்ப நிபுணர் ஒருவரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த அரசு காலத்தில் பணியகத்தின் நடவடிக்கைச் செலவாக 150 மில்லியன் ரூபா செலவு செய்யப்பட்டுள்ளமை தொடர்பாக ஆராய்வதற்காகவே இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் நிறுவனத்தில் பதவிகள், வழங்கியமை பிரசார நடவடிக்கைகளுக்கான செலவினம் தொடர்பாகவும் விசாரணைகள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் இக்குழுவின் விசாரணை அறிக்கைகளை 10 நாட்களில் அமைச்சரிடம் கையளிக்க வேண்டும் எனவும் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
நல்லாட்சியை ஏற்படுத்துவதுடன் தேவையற்ற செலவினம், வீண்விரயம் என்பவற்றை இல்லாதொழித்து நட்டத்தில் இயங்குவதிலிருந்து நிறுவனங்களை மீட்டு இலாபமீட்டும் நிலைக்கு கொண்டு வருவதே அரசின் நோக்கமாகும். வெளிநாட்டு வேலைவாய்ப்பை பெற்றுச் சென்றுள்ளவர்களுக்கு 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் நிவாரணங்களை பெற்றுக்கொடுப்பதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அமைச்சர் தலதா அத்துகோரள தெரிவித்தார்.