வெளி மாவட்டங்களுக்குள் வழங்கப்பட்ட கல்வியல் கல்லூரி ஆசிரிய நியமனங்களை தங்களுடைய சொந்த பிரதேசங்களுக்குள் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதியமைச்சர் அப்துல்லா மஃறூப் கோரிக்கை விடுத்துள்ளார்.
அண்மையில் வழங்கப்பட்ட கல்வியல் கல்லூரி ஆசிரியர்களுக்கான நியமனங்கள் வெளிமாவட்டங்களுக்குள் வழங்கப்பட்டுள்ளது இது தொடர்பில் பிரதியமைச்சரிடத்தில் வெளிமாவட்டங்களில் நியமனக் கடிதங்களை பெற்ற ஆசிரிய ஆசிரியைகள் தங்களை சொந்த மாவட்டங்களில் பணியாற்றுவதற்கான நடவடிக்கைகளை செய்து தருமாறு கோரியிருந்தனர் .இது தொடர்பில் கல்வி அமைச்சர் அகிலோஇராஜ் காரியவசமிடத்தில் இன்று (10) பிரதியமைச்சரினால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
விசேட புள்ளிகள் மூலம் சித்தியடைந்த அனேகமானவர்கள் வெளி மாவட்டங்களுக்கு நியமனம் செய்யப்பட்டுள்ளார்கள். குறித்த நியமனத்தின் முன்னரே மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட கல்வி உயரதிகாரிகளுடன் இது தொடர்பான கலந்துரையாடலில் தங்களது சொந்த மாவட்டங்களிலேயே நியமனம் செய்வது தொடர்பில் முடிவுகள் எட்டப்பட்டுள்ள நிலையில் மாற்றமாக இவ்வாறான நியமனங்கள் இடம் பெற்றுள்ளது .
கிழக்கு மாகாணத்தை சேர்ந்த அனேக பாடசாலைகளில் ஆசிரியர் பற்றாக்குறை வெற்றிடங்கள் நிலவி வருகிறது இதனை கருத்திற் கொண்டு வழங்கப்பட்ட நியமனங்களை தங்களது சொந்த மாவட்டத்தில் நியமனங்களை வழங்குமாறு மேலும் கல்வி அமைச்சரிடத்தில் விடுத்துள்ள கோரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.