Breaking
Fri. Dec 27th, 2024

வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர இன்று இரவு இந்தியாவுக்கான விஜயத்தை மேற்கொள்கிறார்.பிரதி வெளிவிவகார அமைச்சர் அஜித் பீ பெரேரா இதனைத் தெரிவித்துள்ளார்.இதன்படி நாளைய தினம் அமைச்சர் மங்கள சமரவீர, இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜை சந்திக்கவுள்ளார்.

இலங்கையில் புதிய அரசாங்கம் பதவி ஏற்றதன் பின்னர் இந்திய மற்றும் இலங்கைக்கு இடையில் முதல் உயர்மட்ட சந்திப்பு இதுவாகும்.இதேவேளை நாளை மறுதினம் அமைச்சர் மங்கள சமரவீர இந்திய பிரதமர் நரேந்திர மோடியையும் சந்திப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Post