அரசாங்கத்தின் இரகசியங்களை வெளியிட்டமை உட்பட சில குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் வெளிவிவகார அமைச்சில் பணிபுரியும் 13 அதிகாரிகள் அடுத்த வாரம் பதவிகளில் இருந்து நீக்கப்படவுள்ளனர்.
இவ்வாறு பதவி நீக்கப்பட உள்ள அதிகாரிகளில் 8 பேர் உயர் அதிகாரிகள் எனக் கூறப்படுகிறது. மேலும் இந்த அதிகாரிகள் தன்னிச்சையாக செயற்பட்டு கொண்டு வாகனம், எரிபொருள் உட்பட அனைத்து வசதிகளையும் பெற்றுக்கொண்டு வெறுமனே காலத்தைக் கடத்தி வருவதாக தெரியவந்துள்ளது.
ஜனாதிபதி, பிரதமர் மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஆகியோரிடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் பின்னர் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் கடந்த காலங்களில் வெளிவிவகார அமைச்சில் காணப்பட்ட செயற்திறன் இன்மை, அமைச்சின் சில அதிகாரிகள் காரணமாக இலங்கைக்கு ஏற்பட்ட பாதிப்பு ஆகிய நிலைமைகளை அடிப்படையாக கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்கத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.