Breaking
Sat. Jan 11th, 2025

வடக்கு, ஊவா மற்றும் சப்ரகமுவ மாகாண பாடசாலைகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளகிழக்கு மாகாணத்தை சேர்ந்த கல்விக் கல்லூரி டிப்ளோமா ஆசிரியர்கள் அனைவரையும் கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கு இடமாற்றி நியமிப்பதற்கு கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் இணக்கம் தெரிவித்திருப்பதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதித் தலைவரும் அரச வர்த்தக கூட்டுத்தாபானத்தின் தலைவருமான கலாநிதி ஏ.எம்.ஜெமீல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

இம்முறை தேசிய கல்விக் கல்லூரிகளில் டிப்ளோமா பட்டம் பெற்றவர்களுக்கானஆசிரியர் நியமனத்தின்போது கிழக்கு மாகாணத்தை சேர்ந்த ஒரு தொகை ஆசிரியர்கள் வடக்கு, ஊவா மற்றும் சப்ரகமுவ மாகாண பாடசாலைகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிய வந்துள்ளது.

இவ்விடயத்தை அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் கைத்தொழில், வணிக அமைச்சருமான ரிஷாத் பதியுதீனின் கவனத்திற்கு, தான் கொண்டு சென்று,வலியுறுத்தியதன் பேரில், அவர் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசத்துடன்தொடர்பு கொண்டு மேற்கொண்ட பேச்சுவார்த்தையின் பயனாக குறித்த ஆசிரியர்களைஅவர்களது சொந்த மாகாணமான கிழக்குப் பாடசாலைகளுக்கு இடமாற்றிக் கொடுக்க இணக்கம் தெரிவித்துள்ளார்.

ஆகையினால் குறித்த ஆசிரியர்கள் எனது சாய்ந்தமருது அலுவலகத்தின் 0672224584எனும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு தமது விபரங்களை சமர்ப்பிக்குமார் கேட்டுக் கொள்கின்றேன்.

கிழக்கு மாகாணத்தில் 5021 ஆசிரியர்களுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது என கிழக்குமுதலமைச்சர் அண்மையில் ஊடகங்களுக்கு தெரிவித்திருந்த நிலையில் கிழக்குமாகாணத்தை சேர்ந்த ஆசிரியர்கள் வெளி மாகாணங்களுக்கு நியமிக்கப்பட்டிருப்பதானது பெரும் அதிர்ச்சியைத் தருகிறது.

அவ்வாறாயின் தேசிய கல்விக் கல்லூரி ஆசிரியர் நியமனத்திற்கு முன்னதாக இந்தமாகாணத்தை சேர்ந்த கல்விக் கல்லூரி ஆசிரியர்களை ஏன் அவர் கிழக்குமாகாணத்திற்கு நியமிப்பதற்கு நடவடிக்கை எடுக்காமல் அசட்டையாக இருந்தார் எனகேட்க விரும்புகின்றேன்.

உண்மையில் கிழக்கு மாகாண முதலமைச்சர், தனது மாகாணத்தின் கல்வி நிலையிலும், ஆசிரியர்களின் நலன்களிலும் கரிசனையற்றிருப்பதனாலேயே கிழக்கை சேர்ந்த ஆசிரியர்கள் இவ்வாறு வெளி மாகாண பாடசாலைகளுக்கு நியமனம் செய்யப்பட்டிருக்கின்றனர்.

இது மிகவும் கவலைக்கும் விசனத்திற்குமுரிய விடயமாகும். கிழக்கின் கல்வி, பொருளாதார, சமூக அபிவிருத்தி விடயங்களில் பொறுப்புணர்ச்சியுடன் செயற்பட வேண்டிய இந்த மாகாணத்தின் அரசியல் தலைமை, சந்தர்ப்பங்களை தவற விட்டு வருவதானது மக்களுக்கு செய்யும் பெரும் துரோகமாகும் என்பதை இந்த சந்தர்ப்பத்தில் சுட்டிக்காட்ட விரும்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

By

Related Post