Breaking
Mon. Dec 23rd, 2024

மட்டக்களப்பு -பொலன்னறுவை பிரதான பாதை வெள்ளத்தில் மூழ்கியதன் காரணமாக நேற்று மாலை குறித்த பாதையினூடான போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் பெய்து வரும் கடும் மழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு காரணமாக பொலன்னறுவை- மட்டக்களப்பு எல்லைக்கிராமப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

மட்டக்களப்பு பாதையின் நாமல்கம மற்றும் பிள்ளையாரடி பகுதிகளில் இரண்டு அடிக்கும் மேலாக வெள்ளநீர் பாய்ந்தோடுகின்றது.

இதன் காரணமாக வெலிக்கந்தை வரையான போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளனர்.

இதற்கிடையே வெலிக்கந்த பகுதியில் உள்ள சியம்பலாகஸ்வெவ குளம் நிரம்பி வழிவதாலும், குடாஓய, மாதுரு ஓயா ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதாலும் எதிர்வரும் நாட்களில் நிலைமை இதனை விட மோசமடையலாம் என்று அஞ்சப்படுகின்றது.

batti_27_10_2015_3

batti_27_10_2015_4

batti_27_10_2015_2

batti_27_10_2015_1

By

Related Post