Breaking
Mon. Dec 23rd, 2024

நாட்டில் நிலவும் அசாதாரண வானிலை காரணமாக களனி ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கினால் இராணுவ முகாம் ஒன்று மூழ்கடிக்கப்பட்டுள்ளது.

களனியாற்றுப்படுகையில் அமைந்துள்ள களுஅக்கல பிரதேசத்தில் உள்ள இராணுவ முகாம் சுற்றிலும் வெள்ளம் சூழ்ந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

இராணுவ முகாமுக்குள் ஆறு அடி உயரம் வரை வெள்ள நீர் புகுந்துள்ளதாக முகாமின் கட்டளை அதிகாரி தெரிவித்துள்ளார்.

வெள்ளம் காரணமாக இராணுவ முகாமுக்கு வழங்கப்பட்ட மின்சார விநியோகமும் துண்டிக்கப்பட்டுள்ளது. அங்கிருந்த ட்ரான்ஸ்போமரை மின்சார சபை அதிகாரிகள் அகற்றி எடுத்துச் சென்றுள்ளனர்.

இதன் காரணமாக ஜெனரேட்டர் மூலமாக இராணுவ முகாமின் மின்சாரத் தேவை பூர்த்தி செய்யப்படும் அதே வேளை முகாமில் உள்ளவர்களின் போக்குவரத்து தேவைகளுக்காக படகுகள் பயன்படுத்தப்படுவதாகவும் தெரிய வந்துள்ளது.

By

Related Post