Breaking
Mon. Dec 23rd, 2024

-பழுலுல்லாஹ் பர்ஹான் –

தற்போது நமது நாட்டில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக அதிகளவான பிரதேசங்கள் முற்றாக நீரில் மூழ்கி தங்களது வீடுகளை விட்டும் ஆயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்துள்ளதை நாம் அறிவோம்.

2011 ம் ஆண்டு நமது பிரதேசத்தில் ஏற்பட்ட பாரிய வெள்ள அணர்த்தத்தின் போது தற்போது பாதிக்கப்பட்ட பிரதேசத்தில் வசிக்கும் மக்கள் நமக்கு அதிகளவான நிவாரண உதவிகள் செய்ததை நாம் மறக்க முடியாது.

அதனடிப்படையில் நமது பிரதேசம் தழுவியதாக எதிர்வரும் வெள்ளிக்கிழமை வெள்ள அனர்த்த நிவாரன நிதி வசூல் ஒன்றினை மேற்கொள்வதற்கு சம்மேளனம் தீர்மானித்துள்ளது.

எனவே, வெள்ளிக் கிழமை ஜும்ஆ தொழுகைக்கு வருபவர்கள் ஆகக் குறைந்தது 100 ரூபாவினை வழங்கி இந்நிவாரண வேலைத்திட்டத்திற்கு பூரன ஒத்துழைப்பு வழங்குமாறு அன்புடன் வேண்டிக் கொள்கின்றோம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

By

Related Post