Breaking
Fri. Jan 10th, 2025

கே.எம்.ரிப்காஸ் 

வெள்ளவத்தை,ஹெவ்லொக் சிட்டி மாடி வீட்டு தொகுதியில் 21 ஆம் மாடியில் இருந்து விழுந்த 4 வயது பெண் குழந்தை உயிரிழந்தது அப்பிரதேசத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த குழந்தை மாபோலை, வத்தளை பிரதேசத்தை சேர்ந்தது  என்பது குறிப்பிடத் தக்கது.

நேற்று சனிக்கிழமை இரவு 8 மணியளவில் இக்குழந்தை 21 ஆம் மாடியில் இருந்து விழுந்து கடும் காயங்களுடன் களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிகபட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெள்ளவத்தை போலீசார் இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Post