Breaking
Mon. Dec 23rd, 2024

 – வடக்கு முஸ்லீம்களுக்கான முன்னணி –

வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட  முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை துரிதப்படுத்த கோரி இலங்கையில் உள்ள அனைத்து பள்ளிவாசல்களிலும் நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகையினை தொடர்ந்து இரண்டு இலட்சம் கையெழுத்துக்களை பெறுகின்ற வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது .

வெள்ளிக்கிழமை ஆரம்பமாகும் இந்த கையெழுத்து வேட்டை சனி மற்றும் ஞாயிறு ஆகிய தினங்களிளும் அந்தந்த பிரதேச மஹல்லாக்களை மையப்படுத்தியும் இடம்பெறவுள்ளது.

வடமாகான உலமா சபை, அல்ஜாசீம் ஆராய்ச்சி நிறுவனம், உடனடி தீர்வுக்கான குழு, (RRT),  அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள் அமைப்பு, வடகமாகாணமுஸ்லிம் பிரஜைகள் ஒன்றியம் என்பன இணைந்து இதனை நாடு தழுவிய முறையில் ஏற்பாடு செய்துள்ளது.

எனவே இதனை எமது சமூக பணியாக கருதி அன்றைய தினம்  பள்ளிவாசலுக்கு முன்பாக வைக்கப்பட்டிருக்கும் பதிவேட்டில்  உங்களது கையெழுத்துக்களை இடுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.இதன் மூலம் 25 வருட அகதி வாழ்வுக்க முற்றுப்புள்ளி வைக்கம் கைகங்கரியத்திற்கு நாமும் பங்களிப்பு நல்கியவர்களின் பட்டிலில் இடம் பெறுவோம்.

அதே போல் இந்த கைங்கரியம் வெற்றி பெற எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் பிராரத்திப்போம்.

                              

Related Post