Breaking
Mon. Dec 23rd, 2024

உலகின் நாட்டாமையாக வலம் வரும் அமெரிக்காவின் அதிகாரத்தை பறைசாற்றும் இடங்களில் ஒன்று வெள்ளை மாளிகை. ஆனால்  அமெரிக்க அதிபரின் அதிகாரபூர்வ இல்லமான வெள்ளை மாளிகையிலும் வை-பை சரியாக இல்லை என்று அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் ஒபாமா அளித்த தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் “வெள்ளை மாளிகையிலேயே பல இடங்களில் வை-பை இணைப்பு கிடைப்பது இல்லை. பழமையான கட்டிடமான வெள்ளை மாளிகையில் ஏராளமான பகுதிகளில் சுத்தமாக வை-பை வேலை செய்வதில்லை.”  என்று அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் இணையத் தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்திருந்தாலும், பல இடங்களில் வை-பை பிரச்சினகள் இருக்கவே செய்கின்றன. இந்தப் பிரச்சினையால் தனது இரண்டு மகள்களும் எரிச்சல் அடைகிறார்கள் என்றும் அந்தப் பேட்டியில் கூறியுள்ளார்.

By

Related Post