Breaking
Thu. Dec 26th, 2024
சோனி திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தின் மீதான சைபர் தாக்குதல் குற்றச்சாட்டு தொடர்பில் அமெரிக்காவுக்கு வட கொரியா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்காவின் பிரதான நிலப்பகுதி எங்கும் தாக்குதல் நடத்தப்போவதாக வட கொரியா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
சோனி பிக்சர்ஸ் திரைப்பட தயா ரிப்பு நிறுவனத்தின் கணனி வலயமைப்பில் அத்துமீறி நுழைந்து செய்யப்பட்ட சைபர் தாக்குதலின் பின்னணியில் வடகொரியா இருப்பதாக அமெரிக்கா சுமத்தும் குற்றச்சாட்டை வடகொரியா தொடர்ந்து மறுத்து வருகிறது. இதற்கு எதிராக வட கொரியா வெளியிட்ட எச்சரிக்கை அறிவிப்பில், வெள்ளை மாளிகை, பென்டகன் உட்பட அமெரிக்காவின் பிரதான நிலங்களை தாக்கப்போவதாக குறிப்பிட்டுள்ளது.
சோனி நிறுவனத்தின் மீது நடந்த சைபர் தாக்குதலாலும் அதன் பின்னர் வந்த மிரட்டல்கள் காரணமாகவும் தாங்கள் தாயாரித்துள்ள ‘தி இண்டர்வியு+’ என்ற அரசியல் நையாண்டி திரைப்படத்தை வெளியிடாமல் நிறுத்திக்கொள்வதாக சோனி கடந்த வெள்ளியன்று அறிவித்தி ருந்தது.
வடகொரிய தலைவர் கிம் nஜhன்; உன்-னை படுகொலை செய்ய சதித் திட்டம் ஒன்று தீட்டப்படுவதாக இந்தப் படத்தின் கதையில் வருகிறது. கிறிஸ் துமஸ் நாளில் இந்தப் படம் வெளியிடப்படுவதாக இருந்தது.
சோனி நிறுவனத்தின் மீது சென்ற மாதம் மோசமான சைபர் தாக்குதல் நடந்திருந்தது. திரை நட்சத்திரங்கள் பற்றிய தனிப்பட்ட விபரங்களும், சம் பந்தப்பட்டவர்களுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தக்கூடிய தனிப்பட்ட மின் அஞ்சல்களும் வெளியில் கசிந்திருந்தன.
இந்நிலையில் வடகொரியா வெளியிட்டிருக்கும் அறி விப்பில், “அமெரிக்காவுடனான சைபர் யுத்தம் உட்பட அனைத்து யுத்த நடவடிக்கைகளுக்கும் வட கொரிய இராணுவம் முழுமையாக தயாராக உள்ளது. எமது கடுமையான மோதலில் வெள்ளை மாளிகை, பென்டகன் இறுதி யில் அமெரிக்க பிரதான நிலம் மோசமாக வீழ்த்தப்படும்” என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
எனினும் அமெரிக்காவை தாக்கப்போவதாக வட கொரியா இதற்கு முன்னரும் பல தடவைகள் நீண்ட எச்சரிக்கை அறிவிப்புகளை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத் தக்கது.

Related Post