-எம்.வை.அமீர்-
ஸ்ரீலங்கா முஸ்லிம்காங்கிரஸின் மாகாணசபை உறுப்பினராகாவும் கட்சியின் உயர் பதவிகளிலும் இருந்த கிழக்குமாகாண சபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீல் அக்கட்சியுடன் ஏற்பட்ட முரண்பாடுகள் காரணமாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இருந்து விலகி அகில இலங்கை மக்கள் காங்கிரசில் இணைந்து கொண்டார்.
மாகாணசபை உறுப்பினரின் செயற்பாடுகளில் திருப்திகொண்ட அமைச்சர் றிசாத் பதியூதீன், அவரது கட்சியான அகில இலங்கை மக்கள் காங்கிரசில் இணைத்து ஜெமீலுக்கு கட்சியின் தேசிய அமைப்பாளர் பதவியை வழங்கியதுடன் எதிர்வரும் ஆகஸ்ட்டில் நடைபெறவுள்ள பொதுத்தேர்தல் தேசியப்பட்டியலில் அவரது பெயரை ஏழாவது இடத்துக்கு இட்டு பாராளமன்ற பிரதிநிதித்துவத்தையும் உறுதிப்படுத்தியுள்ளார்.
அகில இலங்கை மக்கள் காங்கிரசில் இணைந்து கொண்ட ஏ.எம்.ஜெமீல், அக்கட்சியை அம்பாறை மாவட்டத்தில் வெற்றிப் பாதைக்கு கொண்டு செல்வதற்காக விரைந்து செயற்பட்டு அதிரடியாக முக்கியஸ்தர்களையும் ஏனையோரையும் இணைத்து வருகிறார்.
அந்த வரிசையில் 2015-07-15 ல் கல்முனை கடற்கரை பள்ளிவாசல் முற்றலில் இடம்பெற்ற மாபெரும் இப்தார் நிகழ்வு ஒன்றின் போது கல்முனை அரசியலில் முஸ்லிம் காங்கிரசுக்கு எதிர் அரசியல் செய்யும் சக்தி வாய்ந்தவரும் பொதுஜன ஐக்கிய முன்னணியின் கல்முனை அமைப்பாளரும் கல்முனை மாநகரசபை உறுப்பினருமான ஏ.எம்.றியாஸ் தனது ஆதரவாளர்களுடன் அகில இலங்கை மக்கள் காங்கிரசில் இணைந்து கொண்டார்.
கல்முனைய மையப்படுத்தி கொழும்புப் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவிரயாளர் கலிலுள் ரகுமான் அகில இலங்கை மக்கள் காங்கிரசில் போட்டியிடுவதும் குறிப்பிடத்தக்கது. நவீன சிந்தனையாளரான கலிலுள் ரகுமான் கல்முனை மக்களால் மிகவும் மதிக்கப்படுபவர் என்பது குறிப்பிடத்தக்கது.