Breaking
Tue. Dec 24th, 2024

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் தவிசாளரும், வடக்கு  கிழக்கு மாகாண முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் அமைச்சருமான சிரேஷ்ட சட்டத்தரணி வேதாந்தி சேகு இஸ்ஸத்தீனை ஐக்கிய மக்கள் கூட்டமைப்பில் இணைப்பதற்கான முதற்கட்ட பேச்சுவார்த்தை இன்று மதியம் (06) அக்கரைப்பற்றில் இடம்பெற்றது.

மு.காவின் முன்னாள் செயலாளரும், ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான எம்.ரீ.ஹசன் அலி, மற்றும் மு.காவின் முன்னாள் தவிசாளரும், ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் முக்கியஸ்தரும், முன்னாள் அமைச்சருமான பஷீர் சேகுதாவூத் ஆகியோர் கலந்துகொண்டு முதற்கட்டப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

இது தொடர்பான இறுதிக் கட்டப் பேச்சுவார்த்தை முன்னாள் அமைச்சர் சேகு இஸ்ஸத்தீன் மற்றும்  அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் ஆகியோருக்கிடையில் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

 

 

 

 

Related Post