Breaking
Mon. Dec 23rd, 2024

வேற்று கிரகவாசிகளை தேடும் புதிய திட்டத்தை நாசா அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளது.

இந்த புதிய திட்டம் மூலம் பூமியை தவிர மற்ற கிரகங்களில் உயிரினங்கள் இருப்பதற்கான வாய்ப்பு உள்ளதா என்பது பற்றி திவீரமாக ஆய்வு செய்யபடும்.

இதற்காக அமைக்கபட்டுள்ள குழுவில் உலகம் முழுவதிலுமிருந்து 12 பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களை சேர்ந்த விஞ்ஞானிகள் இடம் பெற்றுள்ளனர்.

நாசாவின் விண்வெளி தொலைநோக்கி கெப்லர் இதுவரை, 1,000 இற்கும் மேற்பட்ட வேற்றுக கிரகங்களை கண்டறிந்துள்ளது.

இவற்றில் அளவில் பூமி போன்று உள்ள 5 கிரகங்களில் உயிரினங்கள் வசிக்க கூடிய சாத்திய கூறுகள் இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் இந்த கிரகங்களை கடந்து வரும் ஒளி கதிர்களை ஆராய்வதன் மூலம் அந்த கிரகங்களை பற்றி தெரிந்து கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.

Related Post