Breaking
Mon. Nov 18th, 2024
-எஸ்.முர்சித் –
மட்டக்களப்பு அம்பாரை மாவட்டங்களில் தொடர்ச்சியாக உண்ணாவிரதம் மேற் கொண்டுவரும் வேலையற்ற பட்டதாரிகளுக்கு வெகுவிரைவில் தீர்வைப் பெற்றுத் தருவதாக பிரதியமைச்சர் அமீர் அலியிடம் பிரதமர் ரணீல் விக்ரமசிங்க மீண்டும் உறுதியளித்துள்ளார்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் இன்று (27.02.2017) மீண்டும் சந்தித்துப் பேசிய பிரதியமைச்சர் அமீர் அலி இந்த மாவட்டங்களில் வேலையற்ற பட்டதாரிகள் உண்ணாவிரதத்தை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருவதாகவும், இந்தப் பிரச்சினையைத் தீர்த்து வைக்க வேண்டிய அவசியத்தையும் தெளிவு படுத்தினார்.
கிழக்கு மாகாணத்தில் சுமார் 4500 பட்டதாரிகள் நீண்டகாலமாக வேலையின்றிப் பெரும் கஸ்;டத்தில் இருப்பதாகவும், அவர்களின் பிரச்சினைகளுக்கு முடிவுகட்டினால் பட்டதாரிகள்; நன்மையடைவதோடு மட்டுமன்றி அந்த மாகாணத்தில் பல்வேறு நன்மைகள் கிடைக்கும் எனவும் தெரிவித்தார்.
இதேவேளை வேலையற்றப் பட்டதாரிகள் இந்தப் பிரச்சினையை தீர்க்க உதவுமாறு அமைச்சர் றிசாட் பதியுதீனிடம் நேரடியாகவும் மகஜர் மூலமும் கோரிக்கை விடுத்திருந்தனர்.
வேலையற்ற பட்டதாரிகளுக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆக்கபூர்வமான தீர்வைப் பெற்றுத் தருமென அக்கட்சியின் தலைவர் அமைச்சர் றிசாட் பதியுதீனும், தவிசாளர், பிரதியமைச்சர் அமீர் அலியும் பாதிக்கப்பட்டவர்களிடம் உறுதியளித்திருந்தனர்.
கடந்த வெள்ளிக்கிழமையும் அமீர் அலி பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து இந்தப் பிரச்சினைக்கு உரியதீர்வைப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறு  வேண்டுகோள் விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

By

Related Post