Breaking
Mon. Dec 23rd, 2024
வவுனியா வைத்தியசாலையை  அண்டிய பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள பழக்கடைகள் சிலவற்றில் பழுதடைந்த பழங்கள் விற்கப்படுவதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
வவுனியா வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெறும் நோயாளர்களை பார்வையிட வருபவர்கள் அவர்களுக்காக பழங்களை கொள்வனவு செய்யும் போது பழுதாகிய மற்றும் அழுகிய நிலையில் உள்ள சில பழங்கள் விற்பனை செய்யப்படுவதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, சிறுவர்கள் கூட பழுதாகியமை தெரியாது பழங்களை வாங்கி கழுவிவிட்டு உண்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
குறித்த  விடயம் தொடர்பில் வவுனியா நகரசபை மற்றும் பொது சுகாதார பரிசோதகர்கள் கவனம் செலுத்தி, பாவனைக்கு ஏற்ற பழங்கள் விற்பனை செய்யப்படுவதை  உறுதிப்படுத்த வேண்டும் எனவும் மக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

By

Related Post