வெளிநாடுகளிலிருந்து கிடைக்கப் பெற்றுள்ள நிதியுதவிகள் நாட்டின் அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கு வெற்றிகரமாக பயன்படுத்தப்பட்டு வருவதாக நிதி முகாமைத்துவ அமைச்சு தெரிவித்துள்ளது.
அந்த வகையில், இந்த வருடத்தின் முதல் நான்கு மாத காலப்பகுதியில் 312 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிதியுதவியில் 302 மில்லியன் டொலர் நிதி செயற்றிட்ட கடன் தொகையாகவும், எஞ்சிய தொகை நேரடி உதவியாகவும் கிடைக்கப் பெற்றுள்ளன. இந்த நிதியுதவித் தொகையில் பெரும் பகுதி சீன அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ளது.