வௌிநாட்டுப் பணியாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளாத, வௌிநாட்டு வேலை வாய்ப்பு முகவர் நிறுவனங்களின் அனுமதிப் பத்திரம் நீடிக்கப்படாது என, வௌிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சர் தலதா அதுகோரல தெரிவித்துள்ளார்.
வௌிநாட்டுப் பணியாளர்களின் உறவினர்களால் முன்வைக்கப்படுகின்ற முறைப்பாடுகளுக்கு தீர்வு பெற்றுக் கொடுக்காத சில வௌிநாட்டு வேலை வாய்ப்பு நிறுவனங்கள் பற்றி முறைப்பாடு கிடைக்கப் பெற்றுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இவ்வாறான நிறுவனங்கள் தொடர்பில் வௌிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் அதிக அவதானம் செலுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.