களனி கங்கைக்கு மேற் பகுதிகளில் வௌ்ள நீர் வடிந்து வருவதாக, நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
எதுஎவ்வாறு இருப்பினும் களனி கங்கைக்கு கீழுள்ள பகுதிகளில் இன்னும் வௌ்ள நிலைமை காணப்படுவதோடு அதுவும் படிப்படியாக குறையும் என எதிர்பார்க்கப்படுவதாக, கூறப்பட்டுள்ளது.
மேலும், காலநிலை மற்றும் கங்கையின் நீர் மட்டம் குறித்து நீர்ப்பாசன திணைக்களம் தொடர்ந்தும் அவதானத்துடன் இருப்பதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
எனவே ஏதேனும் ஆபத்து நிலைமைகள் இருப்பின் காலதாமதம் இன்றி அதனை மக்களுக்கு தெரியப்படுத்த நடவடிக்கை எடுப்பதாகவும் அந்த திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
இதேவேளை, நாட்டின் பல பகுதிகளில் ஏற்பட்ட வௌ்ளநீர் தற்போது வடிந்து வருவதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.
எனினும் தற்போதும் இரண்டு இலட்சத்துக்கு அதிகமான மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாக, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடுபிலி தெரிவித்துள்ளார்.