Breaking
Mon. Dec 23rd, 2024

தேசிய சுதந்திர முன்னணி தலைவரும் முன்னாள் அமைச்சருமான விமல் வீரவன்சவின் மனைவி ஷசி வீரவன்ச மீது இன்று(30) வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளதாக தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கு போலி தகவல் மற்றும் ஆவணங்களை சமர்ப்பித்து முறைசாரா வழியில் வெளிநாட்டு கடவுசீட்டினை பெற்றுக் கொள்வதற்கு நடவடிக்கை மேற்கொண்டது தொடர்பில் குறித்த வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளது.

சட்டமா அதிபரின் ஆசோனைக்கமைய குற்ற புலனாய்வு திணைக்களத்தினால் ஷசி வீரவன்சவுக்கு எதிரான முறைப்பாடு இன்று கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

ஷசி வீரவன்ச குற்ற புலனாய்வு திணைக்களத்திற்கு நீண்ட வாக்குமூலம் ஒன்றை வழங்கி, வெளிநாட்டு கடவுச்சீட்டிற்கான விண்ணப்பப்பத்திரத்தை தனது கணவரான விமல் வீரவன்சவினால் நிரப்பப்பட்டுள்ள நிலையில் அதற்கான ஆவணங்கள் அனைத்தும் தனது கணவரால் தாயரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்படாதென சட்டமா அதிபர் திணைக்கள தகவல் வட்டாரங்கள் உறுதி செய்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

By

Related Post