Breaking
Sun. Dec 22nd, 2024

ஷிகா வைரஸ் வேக­மாகப் பரவி வரும் நிலையில் சர்­வ­தேச அளவில் உலக சுகா­தார அமைப்பு அவ­சர நிலையை பிர­க­ட­னப்­படுத்­தி­யுள்­ளது .

தென் அமெ­ரிக்க நாடு­களில் வேக­மாகப் பரவி வரும் ஷிகா வைரஸ் பிற நாடு­க­ளுக்கும் மெது­வாக பரவி வரு­கி­றது.

மேற்கு ஆபி­ரிக்­காவில் எபோலா வைரஸ் பர­வி­ய­போது நட­வடிக்கை எடுக்க தாம­த­மா­கி­யதை அந்த அமைப்பு ஒப்புக் கொண்டுள்­ளது.

இது குறித்து உலக சுகா­தார அமைப்பின் இயக்­குநர் மார்­கரெட் சான், ஷிகா வைரஸால் உலகின் பிற பகு­தி­க­ளுக்கும் அச்சுறுத்தல் ஏற்­பட்­டுள்­ளது.

இந்­ நி­லையில் உலக அளவில் அவ­சர நிலை பிர­க­ட­னப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. கர்ப்­பி­ணி­க­ளையும், குழந்­தை­க­ளையும் பாது­காக்க முன்­னு­ரிமை அளிக்­கப்­படும். நுளம்­புகள் பெரு­கு­வதை தடுக்க வேண்­டு­மென கூறி­யுள்ளார்.

இத­னி­டையே பிரேஸில் ஒலிம்பிக் போட்டி இடம்­பெற 6 மாதங்­களே உள்ள நிலையில் அரங்­கு­க­ளுக்குச் செல்­வதைக் கர்ப்பிணிகள் தவிர்க்க வேண்­டு­மென பிரேஸில் கேட்­டுக்­ கொண்டுள்­ளது.

ஆபத்தை விலைக்கு வாங்க வேண்டாம் என்று பிரேஸில் ஜனாதி­பதி டில்மா ருசெப்பின் பேச்­சாளர் வெக்னர் தெரி­வித்­துள்ளார்.

தென் அமெ­ரிக்­காவில் ஷிகா வைரஸ் வே­க­மாக பரவி வரு­வ­தா­கவும், இந்த ஆண்டில் மட்டும் 40 இலட்சம் பேர் அந்த வைரஸால் பாதிக்­கப்­ப­டக்­கூடும் என்றும் உலக சுகா­தார அமைப்பு கடந்த வாரம் எச்­ச­ரித்­தி­ருந்­தது.

இது­வரை 25 நாடு­களில் ஷிகா வைரஸ் பாதிப்பு உள்­ளது. அந்த நாடுகளில் 40 இலட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் பிரேஸிலில் மட்டும் 15 இலட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

By

Related Post