Breaking
Fri. Nov 15th, 2024

– MB.முஹம்மது ஸில்மி, கிழக்குப் பல்கலைக்கழகம் –

கல்குடா உலமா சபை பொதுமக்களுக்கு விடுக்கும் அன்பான வேண்டுகோள். அன்பின் இஸ்லாமிய சகோதர சகோதரிகளே!

எமது கல்குடாப் பிரதேசம் 100% ஸுன்னத் வல்ஜமாஅத் கொள்கையைப் பின்பற்றி வாழும் முஸ்லிம்களைக் கொண்ட பகுதியாகும். இஸ்லாமிய அகீதாவிற்கு முற்றிலும் முரணான கொள்கையுடைய ஷீஆக்கள் தமது “தகிய்யா” எனும் நடிப்புக் கொள்கை மூலம் இப்பிரதேசத்தில் வேரூண்றி நீண்ட காலமாக தமது விஷக்கருத்துக்களை மக்கள் மத்தியில் பரப்பிக் கொண்டிருக்கின்றார்கள்.

ஆரம்பத்தில் தமது மதரஸாவை மாத்திரம் தளமாகக் கொண்டு இக்கொள்கையை விற்பனை செய்த இவர்கள் தற்போது தமது கொள்கை பரப்புச் செயற்பாட்டிற்கென கலாசார நிலையம், குர்ஆன் மதரஸா, இலவச தையல் பயிற்சி முகாம், இலவச தொழில் வழிகாட்டல் நிலையம், இலவசக் கணினி மற்றும் மொழி விருத்தி நிலையம் போன்ற நிறுவனங்களை நிறுவி அதனூடாக தமது கொள்கைகளை ஊடுருவச் செய்கின்றனர்.

இதன் விளைவாக எமது பிரதேச பாடசாலைகள், நிறுவனங்கள் பலவற்றில் ஷீஆக் கொள்கையைப் பிரச்சாரம் செய்பவர்கள் உருவாகி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறார்கள். அதில் ஒன்றாகவே அண்மையில் மீராவோடை அல் ஹிதாயா பாடசாலையில் எமது சபையின் பொருளாளர் முஹர்ரம் மாதம் தொடர்பாக விஷேட உரையொன்றினை மாணவர்களுக்கு வழங்கிக்கொண்டிருந்தபோது அங்கே கற்பிக்கும் இக்கொள்கையைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் ஒலிவாங்கியைப் பறித்தெடுத்து அடாவடித்தனம் செய்த நிகழ்வும் அமைந்துள்ளது.

எனவே, இவ்விடயத்தில் பெற்றோர்கள், பாடசாலை, அதிபர்கள், நிறுவனத் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் அனைவரும் விழிப்பாக இருக்குமாறும் இலவசம் என்ற போர்வையில் ஷீஆக்கள் நடாத்தும் வகுப்புக்கள், பயிற்சி நெறிகள் என்பனவற்றிற்கு மாணவ, மாணவிகளை அனுப்புவதைத் தவிர்த்துக் கொள்ளுமாறும் உரிய ஆலோசனைகளையும் வழிகாட்டல்களையும் வழங்கி அவர்களது ஈமானைப் பாதுகாக்க சகலரும் முயற்சிக்குமாறும் உலமா சபை அன்பாகக் கேட்டுக் கொள்கின்றது.

By

Related Post