தேசிய ஷூரா சபையின் சமூக பொருளாதார உபகுழு நடாத்திய ஆய்வுகளின் படி இலங்கை முஸ்லிம் சமூகத்தின் பொருளாதார அபிவிருத்திக்கு கூட்டு ஸகாத் நிதிகளின் முறையான விநியோகம் பிரதான பங்கு வகிக்கிறது.
அந்தவகையில் இலங்கையில் பிராந்திய, பள்ளிவாசல் (கிராம) மட்டங்களில் ஸகாத் நிதிகளை சேகரித்து அவற்றின் மூலம் பல்வேறு செயற்திட்டங்களை மேற்கொண்டுவரும் அமைப்புகள், பள்ளிவாசல் ஸக்காத் அமைப்புக்களுடான சந்திப்பொன்றை மேற்கொண்டு, பல்வேறு தரப்பினரதும் அனுபவங்களைப் பரிமாறி இத்துறையை மேலும் மேம்படுத்துவதற்ககான வழிமுறைகளைக் கண்டறிய இவ்வுபகுழு உத்தேசித்துள்ளது.
இச்சந்திப்பிற்கு நாடாளாவிய ரீதியில் இயங்கும் அனைத்து ஸக்காத் அமைப்புகளையும்,கூட்டு ஸகாத் முறையை நடைமுறைப் படுத்தும் பள்ளிவாசல் நிர்வாகங்களையும் பங்கேற்கச் செய்வதற்காக, அத்தகைய அமைப்புக்கள், பள்ளிவாசல் ஸக்காத் அமைப்புகளின் தகவல்களைப் பெற்றுக்கொள்ள தேசிய ஷூரா சபை விரும்புகிறது.
எனவே, உங்களது ஸக்காத் அமைப்பின் பின்வரும் விபரங்களை, இன்ஷா அல்லாஹ், எதிர்வரும் 25/03/2016 திகதிக்கு முன்னர் 077-0643 768 எனும் இலக்கத்துக்கு SMS அல்லது Whatsapp செய்யுமாறு தாழ்மையுடன் வேண்டிக்கொள்கிறோம்.
1. ஸக்காத் அமைப்பின் பெயர்:
2. முகவரி:
3. தொடர்பு கொள்ளவேண்டியவரின் பெயர்:
4. தொடர்பு இலக்கம்: