பழுலுல்லாஹ் பர்ஹான்
காத்தான்குடி பிரதேசத்தில் மிகச் சிறப்பாக இயங்கிவரும் காத்தான்குடி-02 ஸாலிஹ் அல்குர்ஆன் மத்ரஸா மாணவர்கள் அல்குர்ஆனை கற்று வெளியாகும் 23வது விழா (13) நேற்று வெள்ளிக்கிழமை காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் இடம்பெற்றது.
ஸாலிஹ் அல்குர்ஆன் மத்ரஸாவின் அதிபர் மௌலவி எம்.எஸ்.எம்.அஸார் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மற்றும் காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமாவின் தலைவரும், காழி நீதிபதியுமான மௌலவி எஸ்.எம்.அலியார் (பலாஹி) கலந்து கொண்டார்.
இதன் போது அதிதிகளினால் தரம் 3ல் அல்குர்ஆனை முடித்த, புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்தவர்கள், உயர் நிலை அடைந்த மத்ரஸா மாணவர்கள், 2014 டிசம்பர் மாதம் வெளியான மாணவர்கள் ஆகியோர் சான்றிதழும், பரிசும் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன், விழாவுக்கு உதவியவர்கள் உட்பட அதி உயர் விருதுக்கு தெரிவு செய்யப்பட்டோர் விருதும், பரிசும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இங்கு ஸாலிஹ் அல்குர்ஆன் மத்ரஸா மாணவர்களின் ஆற்றல்களை வெளிக்கொணரும் பல்வேறு இஸ்லாமிய கலை நிகழ்வுகள் இடம்பெற்றன.
இந்நிகழ்வில் சுகாதார வைத்திய அதிகாரி யூ.எல்.நஸீர்தீன், சட்ட வைத்திய அதிகாரி எம்.எம்.ஏ.அப்துர் ரஹ்மான், காத்தான்குடி மீடியா போரத்தின் தலைவரும், சிரேஷ்ட ஊடகவியலாளருமான எஸ்.எம்.எம்.முஸ்தபா (பலாஹி), காத்தான்குடி மீடியா போரத்தின் உப தலைவரும், சிரேஷ்ட ஊடகவியலாளருமான எம்.எஸ்.எம்.நூர்தீன், அஷ்ஷெய்து ஜெயின் மௌலானா பள்ளிவாயல் பேஷ் இமாம் எம்.ஏ.எம்.மஸ்ஊத் அஹ்மத் (காஸிமி), முஹாசபா மீடியா நெட்வேர்க் பணிப்பாளர் ஜுனைத் எம் பஹாத் உட்பட உலமாக்கள், ஊர் பிரமுகர்கள், புத்திஜீவிகள், கல்வியலாளர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.