Breaking
Fri. Dec 27th, 2024
ஸிகா வைரஸ் தொற்றியுள்ள ஒருவர் நாட்டிற்குள் பிரவேசித்தால் எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் குறித்து விமானநிலைய உத்தியோகத்தர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் ஆய்வுப் பிரிவு குறிப்பிட்டுள்ளது. சுகாதார அமைச்சின் ஊடாக சுகாதார தரப்புகளுக்கும் அறிவுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளதாக தொற்றுநோய் ஆய்வுப் பிரிவின் பணிப்பாளரான விசேட நிபுணர் டொக்டர் பபா பலிஹவடன தெரிவித்துள்ளார்.
பிரேஸில் உள்ளிட்ட அதன் அயல் நாடுகளில் ஸிகா வைரஸ் வேகமாக பரவியிருந்ததாக  சுட்டிக்காட்டிய அவர், ஆயினும் இலங்கையில் ஸிகா வைரஸ் தொற்றுக்குள்ளான எவரும் இதுவரை பதிவாகவில்லை என்றும் தொற்றுநோய் ஆய்வுப் பிரிவின் பணிப்பாளர் கூறியுள்ளார்.

By

Related Post