Breaking
Sun. Dec 22nd, 2024

அழ­கிய மீன் தொட்டி ஒன் றில் சுடு நீரை ஊற்­று­வது போலவே சம்பூர் அனல் மின் நிலையம் இலங்­கையில் அமை­யப்­போ­கின்­றது. முழு உல­கமே அனல் மின் நிலை­யத்­திட்­டத்தை கைவி­டு­கையில் இலங்கை மாத்­திரம் அதனை ஆத­ரிப்­ப­தை­யிட்டு சர்­வ­தேசம் வியப்­ப­டைந்­துள்­ளது. எவ்­வா­றா­யினும் உத்­தேச அனல் மின் நிலையத் திட்டம் இந்­தி­யா­விற்கு மின்­சா­ரத்தை பெற்றுக் கொடுத்து இலங்கை மக்­க­ளுக்கும் இயற்­கைக்கும் அழி­வைத்­தர போகின்­றது என சூழ­லி­ய­ளாலர் கலா­நிதி எப். ரணில் சேனா­நா­யக்க தெரி­வித்தார்.

சம்பூர் அனல் மின் நிலையம் தொடர்பில் வீர­கே­சரி பத்­தி­ரி­கைக்கு அவர் வழங்­கிய விசேட செவ்­வி­யி­லேயே இவ்­வாறு தெரி­வித்­துள்ளார். சூழ­லி­ய­ளாலர் கலா­நிதி எப். ரணில் சேனா­நா­யக்க வழங்­கிய செவ்­வியின் முழுமை பின­்வ­ரு­மாறு,

சம்பூர் அனல் மின் நிலை­யத்தின் தேவை

சம்பூர் அனல் மின் நிலை­யத்தை இலங்­கையில் அமைப்­ப­தா­னது தேசிய மட்­டத்தில் மாத்­திரமல்ல சர்­வ­தேச ரீதி­யிலும் மோச­மான நிலை­யாகும். டிசம்பர் மாதம் எமது ஜனா­தி­பதி பாரிஸ் நக­ரிற்கு சென்று கால நிலை தொடர்­பாக இடம்­பெற்ற மாநாட்டில் கலந்து கொண்டார். இலங்கை, கனிய காபன் பயன்­பாட்­டிற்கு அப்பாற் சென்று அபி­வி­ருத்­தியை நோக்கி பய­ணிக்கும் என ஜனா­தி­பதி இதன் போது தெரி­வித்­தி­ருந்தார். இவ்­வா­றான பயன்­பா­டுக­ளினால் ஏற்­படக் கூடிய பாதிப்பு முழு உல­கிற்கும் தாக்கம் செலுத்தும். ஒரு நாட்­டிற்கு மாத்திரம் பாதிப்பு ஏற்­படப் போவ­தில்லை. காபனி ரொக்சைட் எனப்­படும் வாயு வெளியான பின்னர் இந்த உலகின் கால நிலையில் வெப்ப நிலை அதி­க­ரிக்கும்.ஒவ்­வொரு நாளும் வெப்­ப­ம­டையும் தன்மை அதி­க­ரிக்கும். இதனால் மழை மற்றும் சூரிய ஒளி மற்றும் காற்று என அனைத்தும் மாற்­ற­ம­டையும். எனவே தான் முழு உல­கமும் இது குறித்து பேசு­கின்­றது. அனல் மின் நிலை­யத்தை ஒரு போதும் அமைக்­கப்­போ­வ­தில்லை என அமெ­ரிக்கா தெரி­வித்­துள்­ளது. ஏற்­க­னவே இந்த திட்­டத்­திற்கு அடி­மைப்­பட்டு பாதிக்­கப்­பட்டோம். ஆனால் எதிர்­கா­லத்தில் ஒரு போதும் அனல் மின் திட்­டத்­திற்கு செல்­லப்­போ­வ­தில்லை என அமெ­ரிக்கா வெளிப்­ப­டை­யா­கவே கூறி­யுள்­ளது. இவ்­வா­றான நிலைமை உலகில் காணப்­ப­டு­கையில் இல ங்கை அனல் மின் நிலையத் திட்­டத்­திற்கு செல்­கின்­றமை பாரிய முட்டாள் தன­மாகும்.

அதேபோன்று எமது நாட்டில் அனல் மின் நிலை­யத்­திற்கு தேவை­யான கரி எமது நாட் டில் இல்லை. வெளிநா­டு­களில் இருந்தே கொண்டு வரப்­பட வேண்டும். மேலும் அனல் மின் நிலை­யத்­திற்கு நாம் பழக்­கப்­பட்டு விட்டால் அதில் இருந்து விடு­ப­டு­வது என்­பது கடி­ன­மா­ன­தாகும். உலகே அனல் மின் நிலையத்தில் இருந்து விடு­ப­டு­கையில் இலங்கை மாத்­திரம் ஏன் இந்த திட்­டத்­திற்கு செல்ல வேண்டும் என நாம் கேள்வி எழுப்­பினோம். அதற்கு மறு­மொ­ழி­யாக விலை குறை­வி­னையே அதி­கா­ரிகள் சுட்­டிக்­காட்­டி­னார்கள். அதி­கா­ரி­களின் இந்தக் கூற்றை நாங்கள் ஆய்­விற்கு உட்­ப­டுத்­தினோம்.இதன் பிர­காரம் இவர்­களின் இலாப கணக்கு விபரம் எமக்கு ஆச்­ச­ரி­யத்தை ஏற்­ப­டுத்­தி­யது. அதா­வது உண்­மை­யான கணக்கை இவர்கள் வெளியிடவில்லை. அனல் மின் நிலை­யத்­திற்கு தேவை­யான மூலப்­பொ­ருட்கள் உள்­ளிட்ட நிலை­யத்தை ஸ்தாபிப்­ப­தற்­கான உப­க­ர­ணங்கள் அனைத்­துமே இலங்கை அர­சாங்கம் கொள்­வ­னவு செய்ய வேண்டும். இதனை காண்­பித்தே இவர்கள் இலாபம் என கூறி­யுள்­ளனர். உண்­மையை மூடி மறைத்து நாட்­டிற்கு பொய்யை கூறி­னார்கள். உண்­மை­யா­கவே இந்த அனல் மின் திட்­டத்­தினால் எமக்கு ஏற்­படக் கூடிய செலவீனம் அதி­க­மா­வது மாத்­திரமல்ல நாட்டு மக்­க­ளுக்கு பாரி­ய­ளவில் சுகா­தார பிரச்­ச­ினைக்கும் கார­ண­மாகி விடும். இதனால் தான் இந்த சம்பூர் திட்­டத்­திற்கு நாங்கள் எதிர்ப்பை தெரி­வித்தோம். கூடிய விரைவில் இந்த திட்­டத்தை நிறுத்த வேண்டும். இதனால் பாரிய பிரச்­சி­னைகள் நாட்டில் ஏற்­படும்.

இந்­தியா எமது அர­சாங்­கத்­துடன் கலந்­து­ரை­யா­டி­யுள்­ளது. இலங்­கையில் இருந்து இந்­தி­யா­விற்கு மின் சாரத்தை கொண்டு செல்­வ­தற்­கா­கவே இந்த கலந்­து­ரை­யாடல் இடம்­பெற்­றது. ஆகவே சம்பூர் அனல் மின் நிலை­யத்­தினால் 500 மெகா வோட் மின்­சா­ரமே எமக்கு கிடைக்­கப்­போ­கின்­றது. இது மிகவும் சிறிய அள­வாகும். இந்த நிலையில் இந்­தியா இலங்­கையில் இருந்து மின்னை பெற்றுக் கொள்­வ­தற்­காக பாரிய அள­வி­லான கேபல் வயரை போடு­வ­தற்கு திட்­ட­மிட்­ட­மை­யா­னது எதிர் காலத்தில் மேலும் அனல் மின் நிலை­யங்­களை அமைப்­ப­தற்­கான முன்­னெ­டுப்­பு­க­ளாகும். ஏன் அவர் கள் அவ்­வாறு செய்­கின்­றனர். இந்­தியா எடுத்துக் கொண்டால் சுவாச ரீதி­யி­லான பிரச்­சினைகள் கார­ண­மாக ஒரு நாளைக்கு ஆயிரம் கணக்கானோர் இறக்­கின்­றனர். இதனால் அவர்கள் இலங்­கையில் அனல் மின்­நி­லை­யத்தை ஸ்தாபித்து மின்­சா­ரத்தை பெற்றுக் கொண்டு இலங்­கையில் வாழும் மக்­களை பாதிப்­புற செய்­கின்­றனர். இதற்கு எமது அதி­கா­ரி­களும் நிறு­வ­னங்­களும் ஒத்­து­ழைப்பு வழங்­கு­வதை நினைக்கும்போது கவ­லை­யாக உள்­ளது.

அனல் மின் நிலை­யத்­தி­னால் ஏற்­படக் கூடிய பாதிப்­புக்கள்

சம்பூர் அனல் மின் நிலையம் எமக்கு பல்­வேறு வழி­களில் பாதிப்­பு­களை ஏற்­ப­டுத்­து­கின்­றது. சம்பூர் அனல் மின்­நி­லையம் செயற்­பட ஆரம்­பித்தவுடன் அதி­லி­ருந்து கனிய வாயுக்கள் பல வெளியாகும். மனித சுவா­சித்­திற்கோ பொது­வான சுகா­தார சூழ­லுக்கோ எவ்­வி­தத்­திலும் ஒவ்­வாத கன வாயுக்­களா­கவே இவை கரு­தப்­ப­டு­கின்­றன. மெகாரி, கெட்­மியம் மற்றும் லெக் போன்ற வாயுக்­களே இவை. இவை எந்த வகை­யிலும் மனித சுவா­சத்­திற்கு ஏற்­பு­டை­ய­தல்ல. தற்­போதும் வட மத்­திய மாகா­ணத்தில் வாழும் விவ­சா­யிகள் பல­ருக்கு சுகா­தார ரீதி­யி­லான பிரச்­ச­ினைகள் காணப்­ப­டு­கின்­றன. இதற்கு அவர்­கள் உண்ணும் உணவு மற்றும் குடி நீரில் விவ­சா­யத்­திற்­காக பயன்­ப­டுத்­திய இர­சா­யன பொருட்­களின் உயிரியல் தன்­மைகள் தேங்கி இருந்து இவை உட­லுக்குள் சென்­ற­மை­யி­னா­லேயே பல்­வேறு நோய்­களில் விவா­சா­யிகள் சிக்­குண்­டுள்­ளனர். இந்த நிலை பூமியில் மேற்­கொள்­ளப்­பட்ட செயற்­பா­டுகள் கார­ண­மா­கவே ஏற்­பட்­டது. ஆனால் சம்பூர் அனல் மின் நிலையம் ஸ்தாபிக்­கப்­பட்டால் அதி­லி­ருந்து வெளியாகும் விஷவா­யுக்கள் அமில மழையை பெய்ய வைத்து நிலை­மையை மோச­மாக்கி விடும். அது மாத்­திரமல்ல விஷ கனி­யங்கள் அனல் மின் நிலை­ய­த்தில் இருந்து வெளியாகும் புகையில் இருந்து தாழ்­வ­டைந்து காற்றில் கலந்து சுவாச பிரச்­சினை­களை தோற்­று­விக்கும்.

சம்பூர் அனல் மின் நிலையம் ஸ்தாபிப்­பது தொடர்பில் அமைக்­கப்­பட்ட அறிக்­கையில் அனல் மின் நிலை­யத்தில் இருந்து வெளியாகும் புகை நேர­டி­யாக செல்­லாது என குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. வடக்கு மற்றும் கிழக்கு என காண்­பித்­துள்­ளனர். இது நடை­பெறக் கூடிய விட­ய­மல்ல. அந்த பிர­தே­சத்தில் ஒரு பாரிய மலை காணப்­ப­டு­மாயின் சரி. இல்லை என்றால் பரு­வ­ப்பெ­யர்ச்சி காற்றில் அநு­ரா­த­புரம், பொலன்­ன­றுவை, தம்­புள்ள மற்றும் சீகி­ரியா எனச் செல்லும். தற்­போது இலங்­கையில் காணப்­படும் மர­பு­ரி­மை­க­ளுக்கு என்ன நடக்கும் ? கல் விகாரை மற்றும் சீகி­ரியா போன்­ற­வற்­றுக்கு அமில மழை பெய்து பாரிய பிரச்­சி­னை­களை ஏற்­ப­டுத்தி விடும். ஏனைய நாடு­களில் அமில மழை பெய்­த­மை­யினால் கற்­க­லா­லான சிற்­பங்கள் கரைந்து விட்­டன. சுமார் 2000 வரு­டங்­க­ளாக நாம் பாது­காத்த எமது இந்த மர­பு­ரி­மை­களை இவர்கள் அழிக்­க முற்­ப­டு­கின்­றனர். இதனை விட மோச­மான நிலை­மையை எதிர்­கொள்ள வேண்­டிய நிலையும் எமக்கு ஏற்­படும். அதா­வது அமில மழை­யி னால் செடி­கொ­டிகள் அழிந்து விடும். ஜேர்­மன் மற்றும் பிரான்ஸ் உட்­பட உலகில் அனல் மின் நிலையம் காணப்­படும் நாடு­களில் இவ்­வாறு இடம்­பெற்­றுள்­ளது. தாவ­ரங்­களில் காணப்­படும் உயிர் நிலை­களை அமில மழை அழித்து விடும். தவ­று­த­லா­யேனும் சம்பூர் அனல் மின் நிலை­யத்­தினால் வெளியாகும் புகை மேகத்தில் கலந்து எமது மகா­போதி மீது அமில மழையை பொழிந்தால் என்ன செய்­வது? இதனை யாரிடம் கூறு­வது? ஒரு தடவை மகா­போ­திக்கு ஆபத்தை ஏற்­ப­டுத்த முற்­பட்­டனர். அது எமது வர­லாறு. ஆனால் அது முடி­யாமல் போனது. இந்­தி­யா­விற்கு அனல் மின் நிலை­யத்தை அமைக்க கொடுப்­பதன் ஊடாக அதனை செய்­வ­தற்கு சந்­தர்ப்பம் அழிப்­பதா? என்ற கேள்வி எழுப்­பப்­பட வேண்டும். இலங்­கையர் என்ற வகையில் இந்த திட்­டத்தை அனு­ம­திப்­பதா என்­பது தொடர்பில் சிந்­திக்க வேண்டும். எதிர்­கால சந்­த­தி­யி­ன­ருக்­காக இதனை நாங்கள் சிந்­திக்க வேண்டும்

நுரைச்­சோலை அனல் மின்­நி­லையம் அமைக்கும் போதும் நாங்கள் எதிர்ப்பை தெரி­வித்தோம். ஆனால் நுரைச்­சோலை அனல் மின் நிலையம் ஸ்தாபிக்­கப்­பட்­டதன் பின்னர் அதன் பாதிப்­புகள் பெரும் அளவில் காணப்­ப­டா­மைக்கு இரண்டு கார­ணங்கள் காணப்­ப­டு­கின்­றன. அதா­வது பழைய இயந்­தி­ரங்­களை கொண்டு வந்து இந்த திட்­டத்தை முன்­னெ­டுத்­த­மை­யினால் அது தொடர்ந்தும் உடைந்து செய­லி­ழந்து போகின்­றது. மற்­றது தெற்கில் இருந்து வரும் பரு­வ­ப்பெ­யர்ச்சி அந்த பிரதேசத்தை தழுவிச் செல்­கின்­றது. ஆனால் தற்­போது சம்­பூரும் நுரைச்­சோ­லையும் செயற்­பட ஆரம்­பித்தால் பாதிப்­புகள் மிக மோச­மா­ன­தாக இருக்கும். நுரைச்­சோலை அமைந்­துள்ள பிர­தே­சத்­திற்கு தற்­போது சென்று பார்த்தால் புகை­யினால் மாத்­திரம் அல்ல அனல் மின் நிலை­யத்தில் இருந்து வெளியாகும் விஷம் கலந்த சாம்­ப­லி­னாலும் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர். வாழ்வில் மிகவும் மோச­மான நிலைக்கு இன்று நுரைச்­சோலை அனல் மின் நிலை­யத்தை அண்­மித்த மக்கள் வாழ்­கின்­றனர். புத்­த­ளத்தில் வாழும் மக்­க­ளிடம் போய்க் கேட்டால் அவர்கள் கூறு­வார்கள். பெண்கள் கரு­வுற்றால் அவர்­களை வேறு இடங்­க­ளுக்கு அனுப்பி விடு­கின்­றனர். அவர்கள் மிகவும் அச்­சத்­து­ட­னேயே உள்­ளனர். இவ்­வாறு நிலைமை இருக்­கின்ற நிலையில் அர­சாங்­கத்தின் அதி­காரி ஒரு­வ­ருக்கு அல்­லது நிறு­வ­னத்­திற்கு எமது உரி­மைகள் தொடர்பில் தீர்­மா­னிக்க முடியும். மக்­க­ளுக்கு இவ்­வாறு அச்­சு­றுத்தல் விடு­வது எவ்­வாறு ? எனவே தான் இந்த அனல் மின் திட்­டத்தை நாங்கள் எதிர்க்­கின்றோம். அனல் மின் திட்டம் தொடர்பில் நாட்டில் கலந்­து­ரை­யா­டி­யி­ருக்க வேண்டும். இந்­திய அதி­கா­ரி­க­ளுடன் ஒப்­பந்தம் செய்து கொண்­ட­தற்­காக நாங்கள் அடி­மை­க­ளா­க வேண்டுமா ?

இந்­தியா மற்றும் சீனா

இந்­தியா மற்றும் சீனாவில் தான் உலகில் அதி­க­மானோர் அனல் மின் நிலை­யத்­தி னால் உயி­ரி­ழக்­கின்­றனர். இது தொடர்­பாக பெரும் தொகை­யான ஆவ­ணங்கள் காணப்­ப­டு­கின்­றன. இந்த இரண்டு நாட்டலும் தான் அனல் மின் நிலையம் கார­ண­மாக நாளொன்­றுக்கு அதி­க­மானோர் உயி­ரி­ழக்­கின்­றனர். தமது மக்கள் இறந்து விட்­டனர் இனி இலங்கை மக்­களை கொன்று விட்டு மின் சக்­தியை பெற்றுக் கொள்வோம் என்று அவர்கள் நினைக்­கின்­ற­னரோ தெரி­ய­வில்லை. இந்த நாடு­களில் அனல் மின் நிலை­யத்­தினால் பாரி­ய­ளவில் பாதிப்­புகள் இருக்­கையில் அதனை ஏன் எமக்கு கொண்டு வந்து தர வேண்டும். மின் சக்­தியை பெற்று கொள்­வ­தற்கு மாற்று வழியே இல்­லையா? இருக்­கின்­றது. சூரிய ஒளியில் இருந்து மின் சக்­தியை பெற்றுக்கொள்ள முடியும். இந்­தி­யாவில் அதற்­கான தொழில் நுட்பம் காணப்­ப­டு­கின்­றது. ஏன் அனல் மின் நிலை­யத்தை கொண்டு வர வேண்டும். நண்பன் ஒருவன் பரிசு வழங்­கினால் அது நன்­மைக்­கா­கத்­தானே இருக்க வேண்டும். இந்­தியா எமது நண்­ப­னாக இருந்தால் ஏன் அனல் மின் நிலை­யத்தை எமக்கு தர வேண்டும். முழு உல­கமும் இதனை அறியும். எமது நாட்டில் உள்ள அப்­பாவி மக்­க­ளுக்கு இது தெரி­யாது. இதனால் தான் ஏமாற்­றப்­ப­டு­கின்­றனர்.இது தவ­றாகும்.

அனல் மின் நிலைய நன்­மைகள்

மின் குமிழை ஏற்­று­வ­தற்கு, குளி­ரூட்­டியை செயற்­ப­டுத்­து­வ­தற்கு போன்ற நன்­மை­களை தவிர வேறு ஒன்றும் இல்லை. இதனால் முழு உல­கமும் மாச­டை­கின்­றது. பொது மக்கள் பாதிக்­கப்­ப­டு­கின்­றனர். இந்த அனல் மின் நிலை­யத்தின் குளிர் தன்­மையை பேணு­வ­தற்கு தண்ணீர் தேவைப்­ப­டு­கின்­றது. திரு­கோ­ண­ம­லையில் ஒரு கடற்­ப­கு­தியில் இருந்து நீரைப் பெற்றுக் கொள்­ளவே உத்­தே­சிக்­கப்­பட்­டுள்­ளது. இது பல மீன்­களின் இனப் பெருக்கம் இடம்­பெறும் இட­மாகும். இங்கு அனல் மின் நிலை­யத்தின் நீரை கலப்­பது என்­பது மீன்கள் உள்ள தொட்­டியில் சுடு நீரை கலப்­பது போன்­ற­தாகும். எனவே மூளை­யுள்ள அனை­வ­ருக்கும் என்ன நடக்­கின்­றது என்­பதை அறிய முடியும். எமது சூழலை பாது­காப்­ப­வர்கள் இதனை நினைத்துப் பார்க்க வில்­லையா ? எமது நாட்டை பாது­காப்­ப­தற்கு நிய­மிக்­கப்­பட்­ட­வர்கள் இருப்­பார்­க­ளாயின் அவர்கள் எங்கே? ஏன் மறைந்­தி­ருக்க வேண் டும்.

திரு­கோ­ண­மலை

திரு­கோ­ண­மலை என்­பது அனைத்து சர்­வ­தேச நாடு­களும் கைப்­பற்ற விரும்பும் ஒரு இட­மாகும். எனவே தான் அனைத்து நாடு­களும் இங்கு அவர்­க­ளது வர்த்­தக நட­வ­டிக்­கைளை முன்­னெ­டுக்க முயற்­சிக்­கின்­றனர். இதை விட திரு­கோ­ண­மலை கடல் மிகவும் ஆழ­மா­னது. துறை­மு­கத்­திற்கு உள் நுழையும் பிர­தேசம் மிக ஆழ­மா­ன­தாக காணப்­ப­டு­கின்­றது. இந்த இடத்­திற்கு நீர்­மூழ்கி கப்­பல்­களை கொண்டு வர முடியும். எனவே உலகின் அனைத்து நாடு­க­ளுக்கும் திரு­கோ­ண­மலை முக்­கி­ய­மாகும். இங்­கி­ருந்து கொண்டு இந்து சமுத்­தி­ரத்தை மிக எளி­தாக கண்­கா­ணித்து நிர்­வ­கிக்க முடியும்.

இன்று சென்று நுரைச்­சோலை அனல் மின் நிலை­யத்­திற்கு அருகில் வாழும் மக்­களை கேளுங்கள். உண்மை நிலை புரியும். சம்­பூரில் வாழும் மக்­களை அழைத்து கொண்டு நுரைச்­சோ­லைக்கு சென்று அங்­குள்ள மக்­க­ளிடம் கலந்­து­ரை­யாட சந்­தர்ப்­பத்தை ஏற்­ப­டுத்திக் கொடுங்கள் அவர்­க­ளது வாழ்வை விளங்கிக் கொள்ள முடியும்.

சம்பூர் அனல் மின் நிலை­யத்தில் இருந்து நாட்டை பாது­காப்­பது எவ்­வாறு

சம்பூர் அனல் மின் நிலை­யத்தில் எவ்­வி­த­மான பாதிப்பும் நாட்­டிற்கு இல்லை என அறிக்கை தயா­ரித்­த­வர்­களின் உண்­மை­களை கண்­ட­றிய வேண்டும். இதன் பின்னர் செல­வு­களை அறிய வேண்டும். அனல் மின் நிலை­யத்தில் உற்­பத்­தி­யாகும் மின்­சா­ரத்தின் உண்­மையான செலவை கண்­ட­றிய வேண்டும். இதனை விட இலா­ப­மாக மின்­சா­ரத்தை பெற்­றுக்­கொள்ள முடி­யுமா? என்­ப­தையும் கண்­ட­றிய வேண்டும். ஆனால் செலவு குறைந்த பாதிப்பு இல்­லாத எத்­த­னையோ வழிகள் மின்­சா­ரத்தை பெற்­றுக்­கொள்ள உள்­ளது. இவை மறைக்­கப்­ப­டு­கின்­றன. ஏன் எமது நாட்டு மக்­க­ளுக்கு இவ்­வாறு செய்­கின்­றனர்.

பொது மக்­களை விழிப்­பூட்ட நட­வ­டிக்கை எடுத்தல்

ஆம். நிச்­ச­ய­மாக பத்­தி­ரி­கை­ளுக்கு அனல் மின் நிலை­யங்­க­ளினால் ஏற்­பட கூடிய ஆபத்­துக்­களை எழு­து­கின்றேன். நேர்­கா­ணல்­களில் கலந்து கொள்­­கின்றேன். நாட்­டையும் நாட்டு மக்­க­ளையும் பாது­காப்­பதே நமது முதற் கடமை என்­பதை தெரி­யப்­ப­டுத்த விரும்­பு­கின்றேன். மக்­களின் சுகா­தா­ரத்தை பாது­காப்­பது அவ­சி­ய­மாகும்.

சம்பூர் அனல் மின் நிலைய ஒப்­பந்தம்

ஆம், ஒப்­பந்­தங்­களை யார் செய்­கின்­றனர். நான்கு ஐந்து பேர் சென்று கைச்­சாத்­திட்­டத்­திற்­காக முழு நாட்­டையும் விற்று விட முடி­யுமா? அதற்கு அதி­காரம் இருக்­கின்­றதா? எத்­த­னையோ ஒப்­பந்­தங்கள் உள்­ளன. பாதிப்­பு­களை எம்மால் ஆதா­ர­பூர்­வ­மாக முன் வைக்க முடியும். எனவே ஒப்­பந்­தத்தை கைவிட வேண்டும். சட்­ட­வி­ரோ­த­மான அனல் மின் திட்­டத்தை கைவிட வேண்டும் என்ற நிலைப்­பாட்­டிற்கு அதி­கா­ரிகள் வர வேண்டும். அனைத்­தையும் நிறுத்தி விட்டு உண்­மை­களை கண்­ட­றிய வேண்டும். அதன் பின்­னரே அடுத்த கட்­டத்­திற்கு செல்ல வேண்டும்.

உலகில் வேறு நாடுகளில் அனல் மின் நிலையம் தடை செய்யப்பட்டுள்ளதா?

உலகில் அனைத்து நாடுகளுமே அனல் மின் நிலைய திட்டத்தை கைவிட்டுள்ளன. இலங்கை மாத்திரம் ஆரம்பிப்பதனால் அதனைக் கண்டு சர்வதேச நாடுகள் ஆச்ச ரியமடைகின்றன. சூழல் தொடர்பில் பேசு கின்றனர். அழகிய நாடு இருப்பதாக கூறுகின்றனர். ஆனால் ஏன் இந்த அழகிய நாட்டை மாசடையச் செய்கின்றனர் என சர் வதேச நாடுகள் கேள்வியெழுப்புகின்றன. அவர்கள் ஆச்சரியமடைந்துள்ளனர்.

சம்பூர் அனல் மின் நிலைய திட்டத்தை நிறுத்துவதற்கு அழுத்தங்கள்

ஆய்வு அறிக்கைகள் மற்றும் அனல் மின் நிலையத்தினால் ஏற்படக் கூடிய பாதிப்புகள் தொடர்பில் அனைத்து தரப்புகளுக்கும் கடி தம் அனுப்பியுள்ளேன். பல தரப்புகளுடன் சந்தித்து கலந்துரையாடியுள்ளேன். இதனை விட இலங்கையர்களுக்கு பயிற்சியளிக்க விரும்புகின்றேன். அனல் மின் நிலையத்தி னால் ஏற்படக் கூடிய பாதிப்புகளை அறிந்து கொண்டால் பிரஜைகள் என்ற வகையில் அனைவராலும் அதற்கு எதிராக செயற்பட முடியும்.அறியாமல் இருந்தால் ஒன்றும் கூற முடியாது. எனவே தான் ஊட கங்களுக்கு இந்த விடயத்தில் பாரிய பொறுப்பும் கட மையும் உள்ளது. நாட்டிற்கும் எதிர்கால சந்ததியினருக்கும் என்ன நடக்கப் போகின் றது என்பதை அறிந்தால் இவ்வாறான திட்டங்களை தடுக்க முடியும். எனவே அறிவதற்கு முன்னர் தீர்மானம் எடுப்பது தவறாகும்.

By

Related Post