இலங்கையில் இஸ்ரேல் தூதரகம் நிறுவப்படுவதனை எதிர்ப்பதாக கூட்டு எதிர்க்கட்சி, பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் சயிட் சாகீல் ஹுசெய்னிடம் தெரிவித்துள்ளது.
அண்மையில் கூட்டு எதிர்க்கட்சியின் பிரதிநிதிகள் பாகிஸ்தான் உயர்ஸ்தானிகரை சந்தித்துள்ளனர்.
இலங்கையில் இஸ்ரேல் தூதரகம் திறக்கப்படுவதனை நம் எதிர்க்கின்றோம் என கூட்டு எதிர்க்கட்சியின் உறுப்பினர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இந்த தீர்ப்பு குறித்து நாம் வருத்தமடைகின்றோம். எமது அரசாங்க ஆட்சிக் காலத்தில் பாலஸ்தீனம் சுயாதீனமான நாடாக இயங்குவதனை விரும்பி செயற்பட்டோம்.
பலஸ்தீன மக்களின் கனவுகளை மெய்படச் செய்ய அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமை தாங்கினார்.
இதன் காரணமாக பலஸ்தீன தலைநகரின் நகரமொன்றுக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் பெயர் சூட்டப்பட்டது.
முஸ்லிம் மக்கள் வாழ்ந்து வரும் பெரும்பாலான அரபிய நாடுகள் எமக்கு உதவிகளை வழங்கியிருந்ததாக முன்னாள் அமைச்சர் பீரிஸ் தெரிவித்துள்ளார்.