Breaking
Mon. Dec 23rd, 2024
இந்து மத பற்றாளராக இருந்தவர் ஸ்வாமி ராமானந்த். இந்துத்வா எந்த அளவு இந்து மதத்தை சிதைத்து வருகிறது என்று கண் கூடாக கண்டார். இந்து மதத்தில் வெறுப்புற்று இறை தேடலில் மூழ்கினார். முடிவில் இஸ்லாம் அவருக்கு வழி காட்டியது. இஸ்லாமிய மார்க்கத்தை தேர்ந்தெடுத்துக் கொண்டார். தனது பெயரையும் சல்மான் ஃபாரிஸ் என்று மாற்றிக் கொண்டார். இறைவன் இவரை பொருந்திக் கொள்வானாக!
மோடி, அமீத்ஷா போன்ற வன்முறையாளர்கள் தங்களின் மெகா ஊழலை மறைப்பதற்காக மக்களின் கவனத்தை திசை திருப்ப தற்போது ஜாகிர் நாயக்கை கையில் எடுத்துள்ளார்கள். ஜாகிர் நாயக் யாரென்றே தெரியாத இந்து மக்கள் இனி அவரது சொற்போழிவுகளை கூர்ந்து கவனிப்பார்கள். அவரது பேச்சில் உள்ள உண்மை தத்துவங்களை தங்கள் வாழ்விலும் கடை பிடிக்க முயற்சிப்பர். மோடியின் பொய் முகம் வெளிச்சத்துக்கு வரும். உண்மை மக்களை சென்றடையும். காலா காலமாக இதுதான் நடந்து வருகிறது.
இஸ்லாம் எந்த அளவு எதிர்க்கப்படுகிறதோ அந்த அளவு வீறு கொண்டு எழும். அதுதான் வரலாறு. நான் சொல்வதில் உள்ள உண்மையை மோடியின் ஆட்சி காலத்திலேயே காணப் போகிறோம் இறைவன் நாடினால்.
‘உங்கள் இறைவனின் மன்னிப்புக்கும் சொர்க்கத்துக்கும் முந்துங்கள். அதன் பரப்பளவு வானம் மற்றும் பூமியின் பரப்பளவு போன்றது. இறைவனையும் அவனது தூதர்களையும் நம்பியவர்களுக்காக அது தயாரிக்கப்பட்டுள்ளது. இதுவே இறைவனின் அருட்கொடை. ‘ -குர்ஆன் 57:21
-சுவனப் பிரியன்-

By

Related Post