Breaking
Mon. Dec 23rd, 2024

மாற்றம் தேவை என்று சிந்திக்கும் அம்பாறை மாவட்ட முஸ்லிம் மக்கள் ஓரணியில் திரண்டு தனித்துவமாக முதன்முறையாக களமிறங்கியுள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மயில் சின்னத்திற்கு வாக்களித்து மூன்று முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களை பெற்று புதிய வரலாறு படைக்க வேண்டும். என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.

சாய்ந்தமருது சீபிறிஜ் விருந்தினர் விடுதி மண்டபத்தில் நேற்று சனிக்கிழமை(25) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்துத்தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்தும் கூறுகையிலே- அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அம்பாறை மாவட்த்தில் மறைந்த தலைவர் எம்.எஸ்எம். அஷ்ரப் பிறந்த மண்ணிலே முதற்தடவையாக களமிறங்கியுள்ளது. வேட்பாளர் பட்டியலில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பி. அப்துல் மஜீத், தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் கலாநிதி எஸ்.எம்.எம். இஸ்மாயில், கல்முனை மாநகர சபை முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் உட்பட கல்விமான்கள், சமூக சேவையாளர்கள், முஸ்லிம் சமூகத்தினை பற்றி சிந்திக்கின்ற ஆளுமையுள்ள வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர்.

இந்த தேர்தலில் யாரையும் வீழ்த்துவதற்காகவோ, எந்தவொரு கட்சியை அழிப்பதற்காகவோ, எந்தவொரு முஸ்லிம் உறுப்பினர்களையும் தோற்கடிக்கவோ நாங்கள் போடடியிடவில்லை.

மாபெரும் தலைவர் மர்ஹூம் அஷ்ரப் முஸ்லிம் காங்கிரஸை உருவாக்கி முஸ்லிம்களின் ஜனநாயக நீரோட்த்தில் இணைந்து தேசிய அரசியலில் பங்களிப்புச் செய்ய வேண்டும். எமது சமூகம் உரிமைப் பற்ற நிரந்தர சமானாத்துடன் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதிலேயே உறுதியாக இருந்தார். அதுமட்டுமன்றி இந்த நாட்டில் சிதறிவாழும் முஸ்லிம் தெற்கில் சிங்களவர்களோடும் வடக்கில் தமிழர்களோடும் நட்புறவுடன் ஒன்றினைந்து வாழும் கலாசாரத்தையும் அறிமுகப்படுத்தினார்.

வரலாற்றுத் துயரமாக அத்தீர்க்கதரிசமான பெருந்தலைவரின் மரணத்தின் பின்னரான ரவுப் ஹக்கீமின் தலைமையில் 15 வருடங்களில் முஸ்லிம் சமூகத்திற்காக அக்கட்சியின் தலைமை எதனையும் செய்யவில்லை. முஸ்லிம் காங்கிரஸ் என்கின்ற விருட்சம் இல்லாது ஆட்சியைமைக்க முடியாது என்கின்ற நிலைமையை அஷ்ரபின் மரணத்தின் பின்னர் மாறியுள்ளது.

முஸ்லிம் காங்கிரஸ் இன்றியே ஆட்சியமைக்கலாம் என்கின்ற நிலை கடந்த இரு தேர்தல்களில் வெளிப்படையாகவே உணர்த்தப்பட்டுள்ள. அவ்வாறிருக்கையில் தான் வன்னியில் என்னைத் தோற்றகடிப்பதன் ஊடாகவோ அல்லது மட்டக்களப்பில் அமீர் அலியை தோற்கடிப்பதன் ஊடாகவே அகில இலங்கை மக்கள் காங்கிரஸை அடியோடு அழித்துவிடலாம் என கருதுகின்றனர்கள்.

தேர்தலில் வாக்குகளை பெறுவதற்காக முஸ்லிம் காங்கிரஸின் தலைமை அம்பாறை கரையோர மாவட்டக்கோரிக்கையை முன்வைக்கும். ஆனால் தேர்தல் முடிவடைந்தவுடன் அதனை மறந்து விடுவார்கள். உண்மையிலே பெருந்தரைவரின் மறைவிற்கு பின்னர் ரவுப் ஹக்கீம் தலைமையில் முஸ்லிம் காங்கிரஸ் இலக்கின்றியே பயணிக்கின்றது.

முஸ்லிம் காங்கிரஸிலிருந்து பிரிந்து சென்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸை ஆரம்பித்தபோது 05 பிரதிநிதிகள் மாத்திரம் இருந்தார்கள். ஆனால் இன்று பிரதேச சபை மற்றும் மாகாணசபை உறுப்பினர்கள் 70பேர் இக்கட்சியில் உள்ளனர்கள். இது எங்களுக்கு கிடைத்த அங்கீகாரம்.

முஸ்லிம் காங்கிரஸின் தலைமை ரவுப் ஹக்கீம் முஸ்லிம் சமூகத்தினைப்பற்றியோ, பிரதேசங்களை பற்றியோ தேர்தல்கள் வருகின்றபோது மாத்திரம் கோசமெழுப்புகின்ற தலைவராக காணப்படுவதனால் முஸ்லிம் காங்கிரஸின் கிழக்கு மாகாண உறுப்பினர் ஜெமீல் எங்களோடு இணைந்துள்ளார். அவருடைய வருகை அம்பாறை மாவட்த்தில் எமது கட்சிக்கு புதிய பலத்தை தந்துள்ளது. நன்றி உணர்வோடு அவரையும், அவர் பிறந்த சாய்ந்தமருது மண்ணையும் நன்றி உணர்வோடு பார்க்கின்றேன். அதற்கு நன்றிக்கடனாக எங்களுடைய தேசியப்பட்டில் உறுப்பினர் ஒன்றை வழங்க கட்சியின் உயர்பீடம் தீர்மாணித்துள்ளது.

கடந்த மஹிந்தராஜபக்ஷவின் ஆட்சியாது ஹிட்லரின் கொடுங்கோல் ஆட்சிக்கு ஒப்பானது. இந்த ஆட்சியில் முஸ்லிம்கள் பட்ட துன்பங்கள், பொருளாதார ரீதியில் இழந்த இழப்புக்கள் மட்டுமல்ல மதத்தலங்களை துவம்சம் செய்யப்பட்டதை ஒருபோதும் மறக்கமுடியாது.

இவ்வாறானதொரு துரஷ்ட நிலையில் மஹிந்தவின் ஆட்சியினை முடிவுக்கு கொண்டுவருமாறு மக்கள் எம்மிடம் வேண்டினார்கள். அதனால்தான் நாங்களும் அந்த மாற்றத்தை செய்து மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதியாக கொண்டுவந்தோம்.

முஸ்லிம்கள் கல்வித்துறை உட்பட பல்வேறு துறைகளிலும் இன்று பின்னதங்கியுள்ளனர்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் வன்னி, புத்தளம், குருணாகல், மட்டக்களப்பு, அநுராதபுரம் மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் ஐக்கிய தேசியக்கட்சியுடன் இணைந்தும் அம்பாறை மாவட்டத்தில் மாத்திரம் தனித்தும் மக்கள் ஆணையை கோரி நிற்கின்றது.

இத்தேர்தலில் வன்னியில் இரு ஆசனங்களும், குருணாகல், புத்தளம், மட்டக்களப்பு, அநுராதபுரம் மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் தலா ஒவ்வொரு ஆசனத்தினையும், அம்பாறை மாவட்டத்தில் இரு ஆசனங்களையும் தேர்தல் மூலம் பெற்று தேசியப்பட்டடியலில் இரு ஆசனங்களுடன் 11 ஆசனங்களை இலக்கு வைத்திருக்கின்றோம். அதன் மூலம் பிரதமரை தீர்மானிக்கின்ற சக்தியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அமையப்போகின்றது.

எதிர்வருகின்ற பொதுத்தேர்தலானது எமது முஸ்லிம் சமூகத்தினைப் பொறுத்தவரையும் மிக முக்கியமானதாகும். 20ஆவது அரசியலமைப்புத்திருத்தம் மற்றும் ஏனைய விடயங்கள் வருகின்ற போது நாட்டிலுள்ள 10வீதமான முஸ்லிம்களின் 23 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்பட வேண்டும். அவர்கள் தகுதியான நேர்மையுள்ள சமூகத்தினைப்பற்றி சிந்திக்கின்ற பணத்திற்கு விலைபோகாத சமூகத்தை விற்றுப்பிழைக்காத நாடாளுமன்ற உறுப்பினர்களை மக்கள் தெரிவுசெய்ய வேண்டும்.

இத்தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிசுக்காக ஐக்கிய தேசியக்கட்சியில் யானைச்சின்னற்கு அளிக்கப்டும் வாக்குகள் கொண்டு அம்பாறையில் போட்டியிடுகின்ற பெரும்பான்மை இனத்தினைச்சேர்ந்த 3 வேட்பாளர்கள் தெரிவுசெய்யக்கூடிய வாப்புக்கள் அதிகமுள்ளது. அதற்கான வியுகங்களை வகுத்துள்ளார்கள்.

எனவே, அம்பாறையில் எமது கட்சியின் மக்கள் ஆதவு நாளுக்குநாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. நாங்கள் இரு ஆசனங்களை பெற்றுக்கொள்ளும் வாய்ப்புள்ளது. முதன்முறையாக தனித்து களமிறங்கியுள்ளது. நாங்கள் மூன்று ஆசனங்களை பெற்றுக்கொள்ள மக்கள் எமது கட்சிக்கு ஓர் சந்தர்ப்பத்தினை வழங்க வேண்டும். என்றார்.

இம்ஊடகமாநாட்டில் பிரதியமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளருமான எம்.எஸ்.அமீர் அலி, கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளருமான ஏ.எம்.ஜெமீல், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் செயலாளர் வை.எஸ். ஹமீட் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட வேட்பாளர்களும் கலந்து கொண்டனர்.

Related Post