Breaking
Wed. Jan 8th, 2025
(ஊடகப் பிரிவு)
ஐம்பெரும் கடமைகளில் இறுதியானதும் முக்கியத்துவமானதுமான ஹஜ் கடமையினை நினைவு கூறும் வகையில் ஹஜ் பெருநாளை கொண்டாடும் தினத்தில், எமது வாழ்வில் விட்டுக் கொடுப்பு, புரிந்துணர்வு என்பவைகள் ஏற்பட வாழ்த்துரைப்பதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசியத் தலைவரும் வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சருமாகிய அல்ஹாஜ் றிசாட் பதியுதீன் தனது பெருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
உலக முஸ்லிம்கள் இன்றைய தினம் நபி இப்றாஹிம் (அலை) அவர்களின் தியாகத்தை நினைவு கூர்ந்து அதன் மூலம் கற்றுக் கொண்ட பாடத்தை சமூக நீரோட்டத்தில் முன்னெடுப்பதை காண முடிகின்றது.
இஸ்லாம் மார்க்கம் சகிப்புத் தன்மையையும் ஏனைய சமூகத்தவர்களுடனான முன்மாதிரிகளைக் கொண்டதாகவும் ஏனைய சகோதர மதத்தை பின்பற்றுபவர்களுக்கும் இதன் மூலம் வழிகாட்டல்கள் எடுத்து இயம்பப்பட்டுள்ளன.
இந்த நாட்டில் வாழும் சமூகங்களில் முன்மாதிரிமிக்க ஒரு சமூகமாக இஸ்லாமியர்கள் திகழ்வதானது எமது தேசத்தின் ஒற்றுமைக்கும் இன உறவுக்கும் கிடைத்த ஒரு வெற்றியாகும் என தெரிவித்துள்ள அமைச்சர் றிசாட் பதியுதீன்  ஈதுல் அழ்ஹா ஹஜ்ஜூப் பெருநாள் கொண்டாடும் அனைத்து இஸ்லாமியர்களுக்கும் தனது பெருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறார்.

Related Post