Breaking
Mon. Dec 23rd, 2024

‘ஹஜ்’ கோட்டா பகிர்வில் ஊழல்கள் இடம்­பெற்­றுள்­ள­தாகக் கூறி தொடர்ந்து நீதி­மன்­றத்தை நாடு­வது சமூ­கத்­துக்கு அவப் பெய­ரையே ஏற்­ப­டுத்தும். இதைத்­த­டுப்­ப­தற்கு ஒரே வழி ஹஜ் ஏற்­பா­டு­களை அர­சாங்கம் பொறுப்­பேற்­ப­தாகும் என அனர்த்த முகா­மைத்­துவ அமைச்­சரும் முன்னாள் ஹஜ் குழுவின் இணைத்­த­லை­வ­ரு­மான ஏ.எச்.எம் பௌசி தெரி­வித்தார்.

இவ்­வ­ரு­டத்­துக்­கான ஹஜ் கோட்டா பகிர்வில் அநீ­தி­யி­ழைக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் நீதி­மன்றம் ஆலோ­சனை வழங்­கி­யி­ருந்த பொறி­மு­றைக்­கேற்ப கோட்ட பகி­ரப்­ப­ட­வில்லை எனத்­தெ­ரி­வித்து அதற்கு இடைக்­கால தடை­யுத்­த­ரவு விதிக்கக் கோரி மூன்று முகவர் நிலைய உரி­மை­யா­ளர்கள் உயர்­நீ­தி­மன்­றத்தில் வழக்­கொன்று தாக்கல் செய்­ய­துள்­ளமை தொடர்பில் வின­வி­ய­போதே அமைச்சர் பௌசி இவ்­வாறு கூறினார்.

அவர் தொடர்ந்தும் கருத்து தெரி­விக்­கையில் அமைச்சர் ஹலீம் பொறுப்­புடன் இவ்­வ­ருட ஹஜ் ஏற்­பா­டு­களை மேற்­கொண்­டுள்ளார். இம்­முறை ஹஜ்­மு­க­வர்­க­ளுக்கு எழுத்துப் பரீட்­சையும் நடாத்­தப்­பட்­டுள்­ளது.அதன்­படி புள்­ளிகள் வழங்­கப்­பட்­டுள்­ளன.

ஹஜ் ஏற்­பா­டு­களில் ஏதும் தவ­றுகள் இடம்­பெற்­றி­ருந்தால் கலந்து பேசி தீர்­வுகள் பெற்­றுக்­கொள்ள வேண்டும். முக­வர்கள் தமது சுய­ந­லத்­தையும் இலா­பத்­தை­யுமே பற்றிச் சிந்­திக்­கி­றார்கள்.

ஹஜ் முக­வர்கள் ஹஜ்­குழு எவ்­வ­ளவு நியா­ய­மாக நடந்து கொண்­டாலும் ஏற்­றுக்­கொள்ள மாட்­டார்கள் அவர்­க­ளுக்கு அதி­க­மாக கோட்டா வழங்­கப்­பட்டால் நல்­லது என்­பார்கள் இல்­லா­விட்டால் நீதி­மன்­றத்தை நாடு­வார்கள்.

ஹஜ் விவ­காரம் எமது சமூ­கத்தின் பிரச்­சி­னை­யாகும் மாற்று இனத்­த­வர்கள் ஹஜ் பெரிய வியா­பாரம் எனவும் இதன்­மூலம் அதிகம் உழைக்­கலாம் எனவும் சிந்­திக்கத் தொடங்கி விட்­டார்கள்.

சவூதி அர­சாங்கம் உல­குக்கு வழங்­கப்­பட்­டு­வரும் ஹஜ்­கோட்­டாக்­களின் எண்­ணிக்­கையை குறைப்­பது தொடர்­பாக ஆராய்ந்து வரு­கின்­றது.யெமன் நாட்டில் நிலவும் யுத்த சூழ்­நி­லையே இதற்குக் கார­ண­மாகும் அவ்­வாறு கோட்டா எண்­ணிக்கை குறைக்­கப்­பட்டால் ஹஜ் முக­வர்­க­ளுக்கு தற்­போது வழங்­கப்­பட்­டுள்ள எண்­ணிக்கை அரை­வா­சி­யாக குறையும்.

அந்­நி­லமை ஏற்­பட்டால் தற்­போது கோட்டா அதி­க­ரித்­துக்­கேட்கும் முக­வர்கள் என்ன செய்­யப்­போ­கி­றார்கள்!
இந்­நி­லையில் ஹஜ் ஏற்­பா­டு­களை அர­சாங்­கமே பொறுப்­பேற்று செய்­வதே சிறந்த மாற்று வழி­யாகும்.

கஃபாவின் புன­ர­மைப்பு வேலைகள் தற்­போது நடந்து கொண்­டி­ருக்­கின்­றன. அப்­பி­ர­தேசம் விரி­வுப­டுத்­தப்­ப­டு­கி­றது. ஒரே நேரத்தில் ஒரு இலட்­சத்து 50 ஆயிரம் பேர் ஒன்று கூடும் அள­வுக்கு பாரிய வேலைத்­திட்டம் இது­வாகும்.

இந்த திட்டம் பூர்த்­தி­யா­னதும் நிச்­சயம் சவூதி அரச அனைத்து நாடு­க­ளி­னதும் கோட்டக்களை அதிகரிக்கும். அந்தச்சந்தர்ப்பத்தில் இலங்கை அரசாங்கம் மீண்டும் ஹஜ் ஏற்பாடுகளில் ஒரு பங்கினை முகவர்களுக்கு வழங்கலாம். அமைச்சர் ஹலீம் இது தொடர்பாக கலந்துரையாடல்களை நடாத்தி ஒரு தீர்மானத்துக்கு வருவது சிறந்தது எனக்கருதுகிறேன் என்றார்.

-Vidivelli-

Related Post