Breaking
Sat. Dec 21st, 2024

بسم الله الرحمن الرحيم

– அ.மு.முஹ்ஸின் –
புனித ஹஜ் பயணம் செல்ல நாடியுள்ளவர்கள் தயவு செய்து தங்களது பயணத்தை வீட்டிலிருந்து ஆரம்பிக்க முன் ஹஜ்ஜை பரிபூரணமாக நிறைவேற்ற அவசியமான அனைத்து விடயங்களையும் , தங்களுக்கு (மார்க்க அறிவிலும், பேணுதலிலும்) மிகவும் நம்பிக்கையான ஒரு ஆலிமை அனுகி , அவருக்கு தங்கள் சக்திக்குற்பட்ட அன்பளிப்பை வழங்கி கற்றுக் கொள்ளுங்கள். ஏனெனில் நீங்கள் உங்களது பெபெறுமதியான நேரங்களையும் ,பணத்தையும் செலவு செய்து  பல சசிரமங்களை சகித்து இப்புனித கடமையை நிறைவேற்ற முன்வந்திருக்கின்றீர்கள்.  அக்கடமையை அள்ளாஹ் எதிர்பார்க்கும் விதத்தில் நிறைவேற்ற தவறும்போது நமது செலவீணங்கள் , சிரமங்கள் அனைத்தும்  வீணாகக்கூடிய அபாயம் இருக்கிறது. ஏனெனில் தனக்கு அவசிமான மார்க்க  அறிவை தேடிக்கற்றுக்கொள்வது ஒவ்வொரு முஸ்லிமான ஆண் பெண் ஒவ்வொருவர் மீதும் கடமையாகும்.
நாம் சிலரை அவதானிக்கின்றோம். அவர்கள் தாங்கள் ஹஜ் பயணம் மேற்கொள்ளும் அமைப்பு சார்பில் வரும் ஆலிம் அனைத்தையும் சொல்லித்தருவார் என்ற நம்பிக்கையில் வந்து அதற்கான சந்தர்ப்பம் கிடைக்காது தான்றோண்டித்தனமாக புனித ஹஜ் கடமையை நிறைவேற்றி விட்டு ,எதுவிதமான பலனையும் அடையாது செல்லும் கவலைக்கிடமான நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.
எனவே இது விடயத்தில் ஹஜ் பயணம் செல்ல இருப்போர் கவனம் செலுத்துவதோடு , முகவர்களும் கவனம் செலுத்துமாறும் , ஹஜ் பயணம் செல்ல இருப்போரை சந்திக்க செல்பவர்கள் இவ்விடயத்தை அவர்களுக்கு ஞாபகப்படுத்துமாறும் பண்புடன் வேண்டிக்கொள்கின்றோம்.
அள்ளாஹ் நம்மையும், நமது நற்கருமங்களையும் இம்மையிலும் மறுமையிலும்  பொருந்திக்கொள்வானாக!

Related Post