நீண்டகாலமாக நோய்வாய்ப்பட்டு படுக்கையில் இருந்த ஹமாஸின் ஸ்தாபக தலைவர்களில் ஒருவரான முஹம்மது தாஹா மரணமடைந்தார்.77 வயதான இவர் மருத்துவமனையில் சிகிட்சைப் பெற்று வந்தார்.1987-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஷேக் அஹ்மத் யாஸீன், அப்துல் அஸீஸ் ரன்தீஸி, மஹ்மூத் ஸஹார், இப்ராஹீம் யாஸுரி, முஹம்மது ஸம்அ, அப்துல் ஃபத்தாஹ் துகான், ஈஸா நஸ்ஸார், ஸலாஹ் ஷஹாதா, முஹம்மது தைஃபி ஆகியோருடன் ஹமாஸின் உருவாக்கத்தில் தலைமைத்துவரீதியாக முக்கிய பங்கினை முஹம்மது தாஹா வகித்திருந்தார்.
ஃபலஸ்தீனின் மத்தியில் உள்ள இப்னா கிராமத்தில் முஹம்மது தாஹா பிறந்தார்.பின்னர் இஸ்ரேலிய அரசு அவரை பலவந்தமாக வீட்டில் இருந்து இறக்கிவிட்டது.32 ஆண்டுகளாக காஸாவில் உள்ள அகதிகள் முகாம் பள்ளிக்கூடத்தில் ஆசிரியராகவும், கதீபாகவும், சமூக சேவகராகவும் பணியாற்றினார்.1992-ஆம் ஆண்டு முஹம்மது தாஹாவை, இஸ்ரேல் லெபனானில் உள்ள மர்ஜுசுஹூருக்கு நாடு கடத்தியது.
2013-ஆம் ஆண்டு இஸ்ரேலின் விமானத்தாக்குதலில் முஹம்மது தாஹாவின் மகன் யாஸிர் உயிர்தியாகியானார்.அதே ஆண்டு புரைஜில் உள்ள அவருடைய வீட்டை இஸ்ரேல் படை அழித்தது.அவரது பிள்ளைகளை கைதுச் செய்தது.