Breaking
Sun. Jan 12th, 2025
சில்வர் பார்க் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் சீமெந்து தொழிற்சாலைக்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு ஹம்பாந்தோட்டை மிறிஜ்ஜாவில முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்தில் இடம்பெற்ற போது பிரதம அதிதியாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க (24) கலந்து கொண்டார்.
ஓமான் நாட்டின் எரிசக்தி அமைச்சர் டாக்டர் மொகம்மட்   ஹமத் அல் ரூஹ்மி விஷேட அதிதியாக கலந்து கொண்ட இந்நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், கைத்தொழில், வர்த்தகம், நீண்ட கால இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றம், கூட்டுறவு அபிவிருத்தி, திறன் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சருமான ரிஷாட் பதியுதீன்  அமைச்சர்களான சஜித் பிரேமதாச, மலிக் சமரவிக்ரம, மங்கள சமரவீர, அகில விராஜ் காரியவசம், தலதா அதுகோரல, தயாகமகே  உட்டபட பலர் கலந்து கொண்டனர். 

Related Post