Breaking
Sat. Nov 16th, 2024

– நவாஸ் சௌபி –

தனது இயலாமையை தொடர்ந்தும் மேடைப் பேச்சுக்களில் பேசி வருகின்ற ஹரீஸ் என்னையோ ஜெமிலையோ பற்றிப் பேச எந்த அருகதையும் அற்றவர். முதலில் அவர் தன்னைச் சுத்தப்படுததிக் கொண்டு எங்களைப் பற்றி பேச வரவேண்டும். நான் கல்முனையின் மேயராக இருந்து செய்ததைக் கூட ஹரீஸ் ஒரு எம்பியாக இருந்து செய்யவில்லை. என கல்முனையின் முன்னாள் மேயர், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் 5 ஆம் இலக்க வேட்பாளர் சிராஸ் மீராசாஹிப் இன்று 06.08.2015 சாய்ந்தமருதில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கருத்து தெரிவித்தார்.

ஜெமீல், சிராஸ் போன்றவர்கள் தங்களது தவறுகளை உணர்ந்து முஸ்லிம் காங்கிரஸில் மீண்டும் இணைவதற்காவது கட்சி இருக்க வேண்டும். என ஹரீஸ் பேசிய பேச்சுக்கு பதில் அளிக்கும் முகமாக சிராஸ் பேசிய எதிர் பேச்சில் மேலும் பேசியதாவது..

கடந்த 2004 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸைவிட்டு பிரிந்து அதாஉல்லாவுடன் இணைந்த ஹரீஸ் அத்தேர்தலில் தோல்வியுற்று தனது தவறை உணர்ந்து மீண்டும் முஸ்லிம் காங்கிரஸில் இணைந்ததுபோல் நாங்களும் இணைய வேண்டும் என்று அவர் எதிர்பார்க்கிறரர் போலும், இவ்வாறு தனது இயலாமையை தொடர்ந்தும் மேடைப் பேச்சுக்களில் பேசி வருகின்ற ஹரீஸ் என்னையோ ஜெமிலையோ பற்றிப் பேச எந்த அருகதையும் அற்றவர். முதலில் அவர் தன்னைச் சுத்தப்படுததிக் கொண்டு எங்களைப் பற்றி பேச வரவேண்டும். நான் கல்முனையின் மேயராக இருந்து செய்ததைக் கூட ஹரீஸ் ஒரு எம்பியாக இருந்து செய்யவில்லை. எங்களுக்கும் அவருக்குமிடையில் நிறையவே அரசியல் வேறுபாடு இருக்கிறது.

ஜெமீலும் நானும் இந்த தேர்தலில் எடுத்திருக்கின்ற அவதாரம் சாய்ந்தமருதுவில் முஸ்லிம் காங்கிரஸின் இருப்பை முழுமையாக இல்லாதொழித்திருக்கிறது. என்பதை சாய்ந்தமருதுவில் நடத்திய கூட்டம் முஸ்லிம் காங்கிரஸ்காரர்களுக்கு உணர்த்தியிருக்கிறது. முஸ்லிம் காங்கிரஸின் கோட்டையான சாய்ந்தமருதில் 300 க்கும் அதிகமான பாதுகாப்பு படைகளுடன், வெளியூர்களில் இருந்து பஸ்களில் ஆட்களை ஏற்றி சனத்திரளை காட்டும் அளவிற்கு அவர்களது நிலை இன்று வங்குறோத்தாகிவிட்டது. இதனால் தனது தோல்வி நிச்சயமாகிவிட்டது என்ற அச்சத்துக்குள்ளான ஹரீஸ் தான் என்ன பேசுவதென்று அறியாது பேசுகின்றார்.

ஏமாற்றும் துரோகங்களையும் பொய்யான வாக்குறுதிகளையும் அளித்துக்கொண்டிருக்கும் ஹக்கீம் இந்த தேர்தலில் கிழக்கு மாகாண மக்களினால் நிராகரிக்கப்பட்ட ஒரு தலைவராக ஊர்ஊராக விரட்டப்படுகின்ற நிலையில் முஸ்லிம் காங்கிரஸ் என்ற கட்சி என்பது நாங்கள் இருவரும் மீண்டும் வந்து இணைவதற்கு இருக்க வேண்டும் என்பதைவிடவும் ஹரீஸ் போன்றவர்கள் அரசியல் புழப்பு நடத்த அந்தக் கட்சி இருந்தாக வேண்டும் என்று நாங்கள் கூறிவைக்க விரும்புகின்றோம். அடுத்த பாராளுமன்றத் தேர்தலில் ஹரீஸ் எங்களுடன் இணையும் அளவிற்கு எங்களது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியும் அதன் தலைமையும் இந்த மாவட்ட மக்களால் வரவேற்கப்படும் நாள் மிகத் துலைவில் இல்லை என்பதையும் ஹரீஸுக்கு சவாலாகவிடுகின்றோம்.

இத் தேர்தலில் அம்பாரை மாவட்ட மக்கள் ஒரு அரசியல் மாற்றத்திற்கான ஆரம்ப பயணத்தை தொடங்கியிருக்கிறார்கள். மஹிந்தவின் ஆட்சியை இல்லாதொழிக்க எப்படி மக்கள் தாங்களாவே ஒரு அரசில் புரட்சியை கையில் எடுத்தார்களோ அதுபோன்றே இன்று கட்சி என்ற பெயரால் சமூகத்தை ஏமாற்றும் வித்தையைச் செய்யும் ஹக்கீமும் அவரது வேட்பாளர்களும் மக்களால் சுயமாக ஒதுக்கப்பட்டுவிட்டார்கள். நாங்கள் 18 ஆம் திகதி தெளிவாக அறிந்துகொள்ளலாம் என்பதையும் அவர்களுக்கு சவாலாக சொல்லி வைக்கின்றேன்.

Related Post