Breaking
Mon. Dec 23rd, 2024

எம்.எச்.எம் அஷ்ரபினால் உருவாக்கப்பட்ட கிழக்கு முஸ்லிம் அரசியல் பலத்தின் புதிய பரிமானம் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் செயலளார் ஹஸன் அலி மற்றும் அமைச்சர் றிஷாட் பதியுதீன் உடனான கூட்டணியாகும்.

இன்று கிழக்கு (அம்பாறை) முஸ்லிம் அரசியல் பலத்தின் பிரதான சக்தியாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸூம் அத்தாவுல்லாவின் தேசிய காங்கிரஸூம் திகழ்கின்றன. அஷ்ரப்பினால் உருவாக்கப்பட்ட முஸ்லிம் அரசியல் எழுச்சிக்கான கீதம் முஸ்லிம் காங்கிரஸ் ஆகும். எனினும் கண்டி ரவூப் ஹக்கீம், அம்பாறை ” இடையே படிப்படியாக சரிவடைந்துள்ளது.
அக்கறைப்பற்றை தனது தாயகப்பூமியாக கொண்ட அதாவுல்லா தமது எல்லையில் எவரையும் நுழையவிடாமல் சிங்கமாக திகழ்ந்தார். அவர் தனக்கு பின்னர் தனது புதல்வரின் ஆதிக்கத்தை தக்கவைப்பதே அவரது அரசியலாகும். முஸ்லிம் ‘கிராமத்தின் தன்மை அக்கறைப்பற்று நகர சபை, பிரதேச சபையை சூழவுள்ளது. மைத்ரி அணியுடன் அதாவுல்ல ஒன்றிணைந்துள்ளார். (மட்டக்களப்பு, காத்தான்குடி ஆகியவற்றின் முஸ்லிம் தலைவரான எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ்வும் இன்று மைத்ரியுடன் இணைந்துள்ளார்.) திரு மைத்ரிபால அம்பாறைக்கு பத்துக்கும் மேற்பட்ட முஸ்லிம் அமைப்பாளர்களை நியமித்துள்ளார்.

ரிஷாட்டின் கிழக்கு வருகை,
கடந்த பொது தேர்தலில் அம்பாறையை றிஷாட் ஆக்கிரமித்தார். றிஷாடின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸூக்கு 33 ஆயிரம் வாக்குள் அதாவது பத்து வீத வாக்குகள் கிடைத்தன. பாராளுமன்ற உறுப்புரிமை ஒரு சொற்ப வாக்குகளினால் தவறிவிட்டது. எனினும் 2015ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் மயில் சின்னத்தை அம்பாறையில் உறுதிப்படுத்த முடிந்தது. கல்முனையில் 18 வீதத்தையும் சம்மாந்துறையில் 27 வீதத்தினையும் பொத்துவிலில் 10 வீத வாக்குகளையும் பெற்று கொண்டது. ஹசன் அலியின் வருகை இதனை மேலும் மெருகூட்டும் என்பதில் சந்தேகமில்லை.

ரவூப் ஹக்கீமை போலன்றி றிஷாட் முஸ்லிம்களின் தேசியவாத தலைவராக மாற்றம் பெறுவது கடந்த பொதுதேர்தலின் ஊடாக ஆரம்பமாகியது. சிங்கள தேசியவாதம் அவரை விமர்சிக்கும் போது றிஷாட் அதனை முஸ்லிம் மக்களுக்கு சிறந்த முறையில் சந்தைப்படுத்தினார். மன்னார் கருவாட்டு வியாபாரியை போன்று அவர் செயற்பட்டார். அதன் பின்னர் அவர் சிங்கள, முஸ்லிம் விரிசல் எங்கு ஏற்படுமோ அங்கு அவர் எழுந்து நிற்பார்.

இதனால் தெற்கு சிங்கள தேசியவாத இயக்கத்தின் மறுப்புறமாக தற்போது வடக்கு கிழக்கு மாகாணங்களில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு அடுத்தப்படியாக றிஷாட் மாறியுள்ளார். இதற்கு இணைவாக அவரது தராசுக்கு முஸ்லிம் தேசியவாத ஈர்ப்பும் பாரமாகியுள்ளது.

ஹஸன் அலியின் அரசியல் றிஷாடின் அரசியல் அல்ல. அவர் கிழக்கில் மட்டுமன்றி கொழும்பை அடிப்படையாக கொண்ட அரசியல் களத்திலும் கௌரவமான கனவான் பாத்திரத்தை கொண்டவர். ஹஸன் அலி தேசிய பட்டியலில் அன்றி மக்களின் வாக்குகளினால் பாராளுமன்றம் செல்லவில்லை. எனினும் அவரின் அதிகாரமும் திறமையும் 2015ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் போது வெளியாகியது.

முஸ்லிம் காங்கிரஸின் தேசிய பட்டியல் உறுப்பினர் பதவி கட்சியின் தவிசாளர் மற்றும் செயலாளரான பஷிர் சேகுதாவுத்துக்கும் ஹஸன் அலிக்கும் கிடைக்கும் என பலர் எதிர்பார்த்திருந்தனர். எனினும் ஹக்கீம் தேசிய பட்டியலில் எம்.எச்.எம். சல்மான், ஹக்கீமின் சகோதரரான டொக்டர் ஏ.ஆர்.ஏ ஹபிஸ் ஆகியோரை இணைத்துக்கொண்டனர்.பின்னர் ஹபீஸை நீக்கி திருகோணமலை மாவட்டத்தின் எம்.எஸ் தௌபீக்கிற்கு அவ்வுறுப்புரிமை வழங்கப்பட்டது. ஹஸன் அலியும், பஷீர் சேகுதாவுத்தும் இணைந்து உதய கம்மன்பிலவை போன்று தூய்மையான முஸ்லிம் காங்கிரஸை அறிமுகப்படுத்தினர்.

பின்னர் இந்த தூய்மையான முஸ்லிம் காங்கிரஸ் கொழும்பை அடிப்படையாக கொண்ட முஸ்லிம் ஐக்கிய விடுதலை முன்னணியுடன் இணைந்து ஐக்கிய சமாதான முன்னணி எனும் கூட்டணியை உருவாக்கினர்.

கட்சியின் அதி உயர்பீடத்தின் செயலாளர் மன்சூர் ஏ.காதர், தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு முன்னால் கட்சியின் செயலாளராக நியமிக்கப்பட்டார். பின்னர் கட்சியின் செயலாளராக அவர் நியமிக்கப்பட்டார். சல்மானை நீக்கி தேசிய பட்டியல் உறுப்பினர் பதவி ஹஸன் அலிக்கு வழங்கப்படுமென இறைவனின் பெயரால் (வல்லாஹி) சத்தியம் செய்ததன் பின்னர் ரவூப் ஹக்கீமினால் ஹஸன் அலி ஏமாற்றப்பட்டார்.

முஸ்லிம் காங்கிரஸின் தலைவரினால் இறைவனின் பெயரால் ஏமாற்றப்பட்ட ஹசன் அலி றிஷாடுடன் இணைந்து ஐக்கிய மக்கள் முன்னணியை உருவாக்கி அதன் தலைவராக இந்த பின்னணியில் செயற்பட்டார்.

வடக்கில் முஸ்லிம் அரசியல்
இன்று றிஷாட் ஐக்கிய தேசிய கட்சியின் ஊடாக வடமாகாணத்தில் (யாழ்ப்பாணத்தின் ஒரு பகுதி தவிர) தனது ஆதிக்கத்தை தக்கவைத்துக்கொண்டுள்ளார். ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்களுக்கு வேட்புமனு பெற்று கொள்வதற்கு றிஷாட் பின்னால் தேடிச்செல்ல வேண்டியேற்பட்டுள்ளது. வன்னியில் உள்ளுராட்சிமன்ற வேட்பாளர்களுள் 90 சதவீதமானவர்கள் றிஷாடுக்கு தேவையான வகையில் நிரப்பப்படவேண்டும்.
கிழக்கு மாகாணத்தில் மயில் சின்னத்தில் போட்டியிடுவதே றிஷாடின் அடிப்படை நோக்கமாகும். ஐக்கிய தேசிய கட்;சி றிஷாடுக்கு தனது பட்டியலில் இருந்து 15 வீதத்தை கிழக்கில் வழங்குவதற்கு விருப்பதுடன் இருந்தது. றிஷாட் தற்போது கிழக்கில் தனித்து போட்டியிடுகின்றார். முஸ்லிம் காங்கிரஸூக்கு ஐக்கிய தேசிய கட்சி பட்டியலில் இணைவது அன்றி வேறு மாற்று வழியில்லை. மறுபுறம் ஐக்கிய தேசிய கட்சிக்கு கிழக்கில் முஸ்லிம் தலைவர்கள் இல்லை. இதனால் முஸ்லிம் காங்கிரஸூக்கு கிடைக்கும் கோட்டா தொடர்பாக அவர்களை இலகுவாக இணைத்துக்கொள்ள முடியும்.

வடமாகாணத்தின் ஐக்கிய தேசிய கட்சி பட்டியலை றிஷாடே தயாரிக்கின்றார். வன்னி மாவட்டத்தில் முஸ்லிம் வாக்குகள் றிஷாடிடம் உள்ளது. எனினும் தமிழர்களின் வாக்குகளை பெற றிஷாடினால் முடியாது. இதனால் ஐதேகவுடன் இணைவது றிஷாடுக்கு சாதகமாகும்.

வடக்கில் சிங்கள தமிழ் வேட்ளார்களின் நிலை

ஐக்கிய தேசிய கட்சி சார்பில் வடக்கில் சிங்கள தமிழ் பட்டியலை றிஷாடே தயாரிக்கின்றார். ஐதேகவில் வேட்புமனு பெறவிருந்த ஆதரவாளர்கள் ஒன்றில் றிஷாடுடன் இணைய வேண்டும். இல்லையேல் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைய வேண்டும். துனுக்காய் மற்றும் மாந்தை கிழக்கு தமிழ் வேட்பாளர்கள் இதனால் ஐதேகவை கைவிட்டு தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து போட்டியிட தயாராகவுள்ளனர். (வவுனியா சிங்கள சபைக்கும் வேட்பாளர்கள் றிஷாடின் அழுத்தங்களுக்கு ஏற்பவே தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இதனால் சுயேட்டை குழுவில் போட்டியிட அவர்கள் தயாராகி வருகின்றனர்.)

கல்முனை (மாநகர சபை) முஸ்லிம் அரசியலின் கோட்டையாகும். அது கல்முனை தமிழ், கல்முனை முஸ்லிம், காரைத்தீவு, சாய்ந்தமருது (வளைந்த மரம்)ஆகிய பிரிவுகளாக உள்ளன. சாய்ந்தமருது பிரதேச சபை ஏற்படுத்தப்படாமையினால் ஜூம்ஆ பள்ளிவாசலின் தலைவர் வை.எம். ஹனீபா சுயேட்சை குழுவொன்றை முன்நிறுத்தவுள்ளார். முஸ்லிம் காங்கிரஸ், றிஷாட்-ஹஸன் அலி கூட்டணி, ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி, மொட்டு என பிரியும் கல்முனை அரசியல் சாய்ந்தமருது விடயத்தினால் மேலும் விரிசல் அடைந்துள்ளது. முஸ்லிம் காங்கிரஸின் பலம் முதல் முதலாக (50 வீத வாக்கு பெறும் நிலை) சவாலுக்கு உட்படுவது தவிர்க்க முடியாது.

சந்திரிகா மஹிந்த அரசாங்கத்தில் அம்பாறையில் பலமான முஸ்லிம் அமைச்சர்கள் இருந்தனர். அரசியல் பலத்தினால் அவர்கள் செயற்கை உள்ளுராட்சி நிறுவனங்கள் மற்றும் பிரதேச செயலகங்களை உருவாக்கினார்கள். அதனால் விரிசல் அடைந்தது. (காரைதீவு பிரதேச செயலகத்தில் இருந்து சாய்ந்தமருது பிரதேச செயலகம் வரை 30 நிமிடங்களில் நடந்து செல்ல முடியும்.) சாய்ந்தமருது பிரதேச செயலகம் உருவாக்கப்பட்;டால் அங்கு வாழும் தமிழ் மக்களுக்கு தமது பிரதிநிதித்துவத்;தை இழக்க வேண்டி ஏற்படும். (பெரும்பான்மையினரின் கருத்துப்படி கல்முனை பிரதேசத்தை நான்கு சபைகளாக ஏற்படுத்த முடியும் என்பதாகும். கல்முனை மாநகர சபையை இழப்பதற்கு முஸ்லிம் தலைவர்கள் விரும்பவில்லை.)

அரசியல் கட்சிகள் மட்டுமன்றி பள்ளிவாசல் மூலமும் குறிப்பிடப்படும் நபர்கள் மாத்திரமே வாக்களிக்க வேண்டும் எனும் பிரேரணையை காரைத்தீவு பிரதேச சபையின் மாளிகைக்காடு பகுதியும் (சாய்ந்தமருதை போன்று ஒரு முனையில் உள்ள பகுதி) விரிவடைந்துள்ளது.

கொழும்பு, கண்டி தெற்கு முஸ்லிம் அரசியலை; போன்று கிழக்கு முஸ்லிம் அரசியல் நெகிழ்ந்து கொடுக்க கூடியதன்று. தேர்தலுக்கு தேர்தல் பணத்தை வாரி இறைக்கும் வேட்பாளர்களும் இனவாதத்தை தூக்கிப்பிடிக்கும் வேட்பாளர்களும் களமிறங்குவார்கள். அவர்கள் பொருட்களை விநியோகிப்பார்கள். இனவாதத்தை விதைப்பார்கள், தேர்தலில் வெற்றிப்பெறுவார்கள். சிராஸ் மீராஸாஹிப், நஸீர் அஹமட் ஆகியோர் இதற்கு சிறந்த உதாரணமாகும். பின்னர் பிரிந்து விடுவார்கள். அதன் மற்றொரு கட்டம் இத்தேர்தலிலும் வெளியாகலாம்.

றிஷாட் ஹஸன் அலி கூட்டணி அம்பாறை அரசியலை மாற்றியமைக்கும். எனினும் அது முஸ்லிம் தேசிய அரசியலுக்கு எவ்வாறான செல்வாக்கை செலுத்தும் என்பது இதுவரை தெளிவில்லை.

எஸ்.எல். அப்துல் அஸீஸ்
கீர்த்தி தென்னக்கோன்
(நிறைவேற்றுப் பணிப்பாளர் கபே அமைப்பு)

Related Post