கிழக்கு மாகாண சபை உறுப்பினர் அஷ்ஷெய்க் எஸ்.எல்.எச்.ஹஸன் மௌலவியின் மறைவு முஸ்லிம் சமுகத்திற்கு பேரிழப்பாகும் என அமைச்சர் ரிசாத் பதியுதீன் தனது அனுதாபச் செய்தியில் தெரிவித்தார்
மார்க்கப்பணியில் தன்னை அர்ப்பணித்து சிறந்த உலமாவாக இருந்ததுடன் முஸ்லிம் ஊர்களில் மத்ரசாக்கள் மற்றும் பள்ளிவாசல்கள் அமைப்பதற்கு பல முயற்சிகளை முன்னெடுத்தார்.
பலகாலமாக அரசியலில் திகழ்ந்த இவர் கண்ணியமான அரசியலை முன்னெடுத்ததை நாம் அறிவோம்
தனிப்பட்ட வாழ்விலும் அரசியல் வாழ்விலும் மிகவும் பக்குவமானவராவும் நற்பண்புகளைக் கொண்டவராகவும் பல முன்மாதிரிகளைக் கொண்டவராகவும் திகழ்ந்தார்.
இவர் பொதுசேவையில் அதிகம் ஈடுபட்டதுடன் இன மத அடிப்படையின்றி அனைவருடன் நன்கு பழகக் கூடியவராகவும் அனைவருக்கும் தன்னால் இயலுமான சேவைகளையும் செய்துவந்துள்ளார்.
இவருக்கு நாம் செய்யும் கைமாறு ஜன்னதுல் பிர்தௌஸ் எனும் சுவர்க்கம் கிடைக்க அனைவரும் துஆப் பிரார்த்தனை செய்வதாகும் என அமைச்சர் தனது அனுதாபச் செய்தியில் தெரிவித்தார்.