Breaking
Mon. Dec 23rd, 2024
ரியோ ஒலிம்பிக்கில் எந்த நாடு எத்தனை பதக்கம் வெல்கிறது என்பது ஒரு கணக்கு என்றால். 100மீ பந்தயத்தில் போல்ட் எத்தனை நொடிகளில் இலக்கை கடந்து தங்கம் வெல்வார் என்பது தான் மற்றோரு கணக்கு. உலகின் அதிவேக மனிதர் உசேன் போல்ட் ரியோ ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வாரா? தொடர்ந்து மூன்றாவது முறையால ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வாரா? என்ற கேள்விகளோடு களமிறங்கினார் போல்ட்.
அனைவரும் எதிர்பார்த்த 100 மீட்டர் போட்டி தூரத்தை 9.81 நொடிகளில் கடந்து தங்கம் வென்றார். இந்த சாதனையை தொடர்ந்து மூன்றாவது முறையாக நிகழ்த்தினார் போல்ட். ஒலிம்பிக்கில் தொடர்ந்து மூன்று முறை 100 மீ ஓட்டத்தில் ஒருவர் தங்கம் வெல்வது இதுவே முதல்முறை.
உசேன் போல்ட்டுக்கு விராட் கோலி, அஸ்வின் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு வீரர்களும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். உசேன் போல்ட் தான் இன்னமும் உலகின் அதிவேக மனிதர் என்ற பெருமையை வைத்துள்ளார். நீங்கள் நதி போல ஓடிக்கொண்டிருங்கள் போல்ட்..

By

Related Post