ஹிஜாப் அணிந்த ஒரே காரணத்திற்காக நதீம் மொஹ்சின் என்ற சகோதரி அமெரிக்காவின் புரூக்ளின் பகுதியின் பாரிக்லேஸ் வீதியில் தாக்கப்பட்டுள்ளார்.. இந்த கொடூரத்தை கண்டித்து அமெரிக்காவில் போராட்டாங்களை நடைபெற்றது.. காவல்துறை இந்த குற்றத்தை கண்ணை மூடிக்கொண்டு வேடிக்கை பார்த்ததாக குற்றம் சாட்டியுள்ளனர்..
நதீம் தாக்கப்பட்ட இடத்தில் தான் இஸ்ரேலிய கால்பந்தாட்ட அணி விளையாடியதும் அந்த நேரத்தில் சியோனிச ஆதரவாளர்கள் இஸ்ரேலுக்கு ஆதரவாக இனவெறியை தூண்டும் பலத்த கோசங்களை எழுப்பியதும் குறிப்பிடத்தக்கது..
அரைகுறை ஆடையுடன் பெண்களை போகப்பொருளாக காட்டுவதை பெண் சுதந்திரம் என்றும் , ஹிஜாப் என்னும் கண்ணியமான ஆடையை அணிவதை பிற்போக்கு தனமாகவும் காட்டுவதை கொள்கையாக கொண்ட அமெரிக்க ஊடகங்கள் எதுவும் ஹிஜாப் அணிந்ததற்காக தாக்கப்பட்ட இந்த சம்பவத்தை பற்றிய எந்த ஒரு உண்மைகளையும் மக்கள் மன்றத்தில் கொண்டு சேர்க்க வில்லை..மாறாக கள்ள மவ்னத்தை மட்டும் தான் பதிலாக கொண்டு வருகின்றனர்,, கேடுகெட்ட ஊடகங்கள்…