Breaking
Wed. Dec 25th, 2024

சாமன்தா, இவர் அமெரிக்காவை சார்ந்த ஒரு இஸ்லாமிய சகோதிரி. இவர் தனது 17 ஆவது வயதில் அமெரிக்க நிறுவனம் ஒன்றிடம் வேலைக்காக விண்ணப்பத்தார்.

அவர் விண்ணபித்த வேலைக்கு உரிய அனைத்து தகுதியும் அவரிம் இருந்தும், அவர் ஹிஜாப் அணியும் இஸ்லாமிய பெண்ணாக இருந்தார் என்பதற்காக அவருக்கு அந்த வேலை வாய்ப்பை அந்த நிறுவனம் நிராகரித்தது.

இதனை எதிர்த்து சாமன்தாவின் சார்பில் அமெரிக்காவில் உள்ள இஸ்லாமிய அமைப்பு ஒன்று நீதிமன்றத்தின் வாசலை தட்டியது. பல கட்ட விசாரணைகளுக்கு பிறகு வழக்கின் தீர்ப்பு தற்ப்போது வந்திருக்கிறது.

தனது 17 வயதில் தொடுக்க பட்ட வழக்கின் தீர்ப்பு தனது 24 ஆவது வயதில் வந்திருப்பதாக கூறும் சாமன்தா தீர்ப்பு தம்மை மகிழ்வித்திருப்பதாக கூறினார்.

ஆம் எட்டு நீதிபதிகள் கொண்ட ஒரு குழு இவரின் வழக்கை விசாரித்தது.

இதில் ஏழு நீதிபதிகள், “குறிப்பிட்ட அமெரிக்க நிறுவனம் ஹிஜாப் அணியகுடியவர் என்பதற்காக வேலை வாய்ப்பை மறுத்தது அமெரிக்க சட்டபடி குற்றம்; இதற்காக அந்த நிறுவனம் சாமன்தாவிர்கு 25 ஆயிரம் டாலர்களை அபரதமாக வழங்கவேண்டும்” என்றும் தீர்ப்பில் கூறியது.

இது சாமன்தாவை மட்டும் இல்லாமல் அமெரிக்க முஸ்லிம்கள் அனைவரையும் மகிழ வைத்திருக்கிறது.

Related Post