இங்கிலாந்து ஹிட்லருக்கு ஆதரவாக டுவிட்டரில் கருத்து பதிவிட்ட பெண்கள் தொழிலாளர் கவுன்சிலர் ஒருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
இங்கிலாந்தின் லூடன் பகுதி கவுன்சிலர் ஆய்செகல் குர்பஸ் என்பவர் தனது டுவிட்டர் வலைதளத்தில் ஹிட்லர் வரலாற்றில் சிறந்த மனிதர் என்று கருத்து பதிவு செய்திருந்தார்.
அதேபோல், உலக வரைபடத்தில் இருந்து ஈராக் நாட்டை துடைத்து எரிய ஈரான் நாட்டால் அணு ஆயுதங்களை உருவாக்கிக் கொள்ள முடியும் என்ற கருத்திற்கு ஆதரவும் தெரிவித்திருந்தார்.
குர்பஸ், லூடனின் மிகவும் இளம் கவுன்சிலர். மேலும், அவர் கடந்த ஆண்டு மாணவராக இருந்த போது கவுன்சிலராக தேர்வு செய்யப்பட்டார்.
இதனையடுத்து தொழிலாளர் கட்சி தலைவர் ஜெர்மி கார்பைன் கூறுகையில், யாரெல்லாம் யூத எதிர்ப்பு கருத்து தெரிவிக்கிறார்களோ அவர்கள் கட்சியில் இருந்து நீக்கப்படுவார்கள்
மேலும், குர்பஸ் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாகவும், விசாரணை நடைபெற்று வருவதாகவும் தொழிலாளர் கட்சி தெரிவித்துள்ளது.
யூத எதிர்ப்பானது வெறுப்புக்குரிய மற்றும் தவறான கருத்து என்று ஜெர்மி கார்பன் தெரிவித்துள்ளார்.