Breaking
Mon. Dec 23rd, 2024
தனது மகள் ஹிருணிகா அடாவடித்தனங்கள் தெரியாத ஒரு அப்பாவி என்று பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திரவின் மனைவி சுமணா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார்.

தெமட்டகொடை வாலிபர் ஒருவர் டிபெண்டர் வாகனத்தில் கடத்தப்பட்ட விவகாரம் தொடர்பில் ஹிருணிக்கா கைது செய்யபட்டு தற்போது பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் ஹிருணிக்கா குறித்து அவரது தாயார் சிங்கள ஊடகமொன்றுக்கு பேட்டியொன்றை வழங்கியுள்ளார்.

அதில் தொடர்ந்தும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

குறித்த கடத்தல் சம்பவத்துடன் ஹிருணிக்கா எவ்வகையிலும் தொடர்பற்றவர். அவரது எதிரிகளே இந்தச் சம்பவத்துடன் அவரது பெயரைத் தொடர்புபடுத்தியுள்ளனர்.

நல்லாட்சி அரசாங்கத்தை பதவிக்குக் கொண்டு வருவதில் ஹிருணிக்கா பெரும் பங்களிப்பை வழங்கியுள்ளார்.அதனை ஜனாதிபதியும் அரசாங்கமும் ஒருபோதும் மறக்க மாட்டார்கள் என்று நம்புகின்றேன்.

பிரேமச்சந்திர குடும்பத்துக்கு தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபாலவுடன் மட்டுமன்றி முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் குடும்பத்தினருடனும் நெருங்கிய தொடர்புகள் உண்டு. இன்றுவரைக்கும் மஹிந்த குடும்பத்தினர் எங்களுடன் அன்பாகவே நடந்து கொள்கின்றனர் என்றும் சுமணா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார்.

By

Related Post